மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகர் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புரு ஷோத்தமன் தலைமையில் காட்டூர் ெரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com