search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demolition work"

    • தொட்டியின் பில்லர்கள் அனைத்தும் பணியாளர்களை கொண்டு சுத்தியலால் உடைக்கப்பட்டு பின்பு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு இடித்து அகற்றப்பட்டது
    • திப்பணம்பட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றும் பணி நடைபெற்றதனால் பாவூர்சத்திரம்- கடையம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் காமராஜர் நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் ஊர் மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் அனைத்தும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது.

    37 ஆண்டுகள் பழமையானது

    சுமார் 37 ஆண்டுகள் பழமை யான இக்குடிநீர் தொட்டியின் கான்கிரீட் பில்லர்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் இதனை அப்புறப்படுத்தி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என திப்பனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த னர். மேலும் ஊராட்சிமன்றம் மூலமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அதனை இடிக்கும் பணி தொடங்கியது. அதனை முன்னிட்டு அருகில் இருந்த பள்ளி மாணவ, மாணவி கள் அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் பாவூர்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதிதாக கட்டப்படுகிறது

    தொட்டியின் பில்லர்கள் அனைத்தும் பணியாளர்களைக் கொண்டு சுத்தியலால் உடைக்கப்பட்டு பின்பு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு இடித்து அகற்றப்பட்டது. கூடுதலாக பாதுகாப்பு கருதி அருகில் இருந்த டிரா ன்ஸ்பார்மரில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

    குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டதும்,அதே இடத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது எனவும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றம் சார்பில் தெரி விக்கப்பட்டது .

    பாவூர்சத்திரம் அருகே திப்பனம்பட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றும் பணி நடைபெற்றதனால் பாவூர்சத்திரம்- கடையம் செல்லும் சாலையில் போக்கு வரத்து மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.

    • அலங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
    • அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கடைகள், ஓட்டல்கள், வளையல், கறி, மருந்து, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புகள், தாழ்வாரங்கள், வாசல்படிகளை ஏற்கனவே வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அளந்து குறியீடு செய்திருந்தனர்.

    அதன்படி, ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது. வாடிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, மற்றும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    ×