search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு-சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
    X

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு-சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

    • 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன.
    • இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா்.

    ஊட்டி,

    முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திறன் திருவிழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கருணாகரன் வரவேற்றாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் திட்டம் குறித்து விளக்கினாா்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. எனவே அங்கு மாணவா்கள் சோ்க்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீடு செய்ய வலியுறுத்தினார்.

    இதன் காரணமாக 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன. இதன் மூலம் 4.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    குன்னூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ உலக அளவில் தரம் உயா்த்தப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் பயிலும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல்வேறு புதிய கருவிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசும்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 100 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்படி 2-வது மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு உள்ளன. இதன்மூலம் எண்ணற்ற இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா் என்றார்.

    இதில் ஊட்டி எம்.எல்.ஏ கணேசன், குன்னூர் நகராட்சி துணைத் தலைவா் பி.எம்.வாஷிம் ராஜா, குன்னூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், திட்டக்குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், நகரமன்ற உறுப்பினா் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர்கள் காளிதாஸ்.செல்வம், நகர துணை செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×