என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
    • கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதரவி பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்க ப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்ப டுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து ள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வர வழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற டைந்தது.

    அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்ப ட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர்.   

    • அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.

    அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர். 

    • மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 18 பெண்கள் உள்பட 28 பேர் கைது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி அமைப்பினர் சார்பில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இந்தி திணிப்பு ஆகிய பிரச்சினைகளுக்காக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாலுகா செயலாளர் மொரச்சன் தலைமை தாங்கினார். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஆஷா பணியாளர் சங்க மாநில துணை தலைவர் வசந்தகுமாரி, ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் பெனடிக்ட், போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க நிர்வாகி தங்கதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது அவர்கள் திடீரென பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைைமயி லான போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பெண்கள் உள்பட 28 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டரை, முத்தாலம்மன்பேட்டை பகுதியில் தார் சாலை பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகளை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.

    அப்போது மாநில தி.மு.க சிறுபான்மை பிரிவு துனை செயலாளர் ரா அன்வர்கான், மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், மணிகண்டன், மன்சூர், செல்வி, மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர் அபீப் ரகிமான் நந்தகுமார் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாடு ஊராட்சி புதுகாலணியில் கடந்த 50 ஆண்டுகளாக சாலைவசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தேனாடு ஊராட்சி புது காலனி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார், அந்த பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி தேனாடு புது காலணியில் சாலைபணிகள் தொடங்கியது. நிகழ்ச்சி யில் தேனாடு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அம்ச வேணி, மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் (எல்.பி.எப்) முருகன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், நீலகிரி மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், இளைஞர்அணி சிவனேசன், புதுகாலனி வார்டு உறுப்பினர் வில்சன், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், தினேஷ், சக்திவேல்,விநாயகம், மணியப்பன், முருகன், கருணா, சிவகுமார், கமல், ஜோதி, நாகேந்திரன், திருச்செல்வம், அல் போன்ஸ், வினோத், விகன்ஸ், சசி, சிவா, அனந்தன், சுவிதா, லக்ஷ்மி, நேசமணி, மகாலக்ஷ்மி, சண்முகசுந்தரி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது தேனாடு புதுக்காலனியில் ரோடு வசதி அமைத்து தர ஏற்பாடு செய்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
    • எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரிய தர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் மகாராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசுகையில் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கக்கூடாது. விநாய கர் சிலைகளை கரைக்கும் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

    சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். மரங்க ளின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி சிலைகளை பளபளப்பாக மாற்றலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்களை பயன்படுத்தி வர்ணம் பூசலாம். எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-குந்தா தாலுகாவில் காமராஜர்சாகர் அணை, மசினக்குடி மரவகண்டி அணை, செம்மநத்தம் ஆறு, நடுவட்டம் டி.ஆர்.பஜார் அணை, குன்னூர் தாலு காவில் லாஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரி தாலுகாவில் உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூட லூர் தாலுகாவில் இரும்பு பாலம், பந்தலூர் தாலுகாவில் பொன்னானி பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    • மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.
    • நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1598 பெண்களுக்கு பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண் டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.

    மேலும் பெண்களுக்காக நடப்பு பட்ஜெட்டில் வெளி யான மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு, நாடெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் பட்டு உள்ளது.

    ஒரு ஆணின் வெற்றிக் கும், குழந்தைகளின் கல்விக்காகவும், குடும் பத்திற்காகவும் தன்னலம் கருதாமல், உடல் நலம் பாராமல் பெண்கள் உழை த்து வருகின்றனர். இப்படி கணக்கில் அடங்காத அளவில் வேலை பார்க்கும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது சாதாரணமான திட்டம் அல்ல என்பதால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று தொடங்கி வைத்துஉள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சாம்சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்,வட்டாட்சியர் சரவணன்குமார், நகர மன்ற தலைவர் வாணிஸ் வரி, நஞ்சநாடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஊட்டி நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

     அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அடுத்த தேனாடு கிராமத்தில் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இடையே பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்குதல், வனவிலங்கு-மனித மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கீழ்கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமை தாங்கினார். வனஅதிகாரிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

    இம்முகாமில் தேனாடு, கோக்கால் கிராமத்தினர் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டுஉறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது பொதுமக்களின் சந்தேகத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

    • ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சுமார் 60 சதவீதம் வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட எச்.பி.எப், கலெக்டர் குடியிருப்பு, ரோஸ்மவுண்ட், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. அவை இந்திரா நகர், பெரிய பிக்கட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி உலா வந்து செல்கின்றன. இந்த நிலையில் ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து, அதனை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேயிலை விவசாயிகள் போராட்டத்துக்கு வியாபாரிகள் அதரவு
    • கோத்தகிரி மசூதியில் நாளை சிறப்பு தொழுகை நடத்துவது என நிர்வாகிகள் முடிவு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக ஒரு கிலோ ரூ.33.75 வழங்க வேண்டும், தேயிலை வாரி யம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நலசங்கம் சார்பில் 15-வது நாளாக தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக 14-வது நாள் போராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாக ராஜன் தலைமை தாங்கினார்.

    இந்தப் போராட்டத் தில் கக்குளா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இது போல ஊட்டி பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கட்ட பெட்டு, கீழ்கோத்தகிரி, அர வேணு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் நேரடியாக உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மேலும் தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெற வேண்டியும், தேயிலைக்கு விலை வேண்டியும் கோத்தகிரி மசூதியில் நாளை சிறப்பு தொழுகை நடத்துவது என முடிவு செய்து உள்ளனர். முன்னதாக அவர்கள் விவசாயிகளின் உண்ணாவி ரத பந்தலுக்கு நேரடியாக வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி அட்டூழியம்
    • தோட்டத்தில் நுழையாததால் அங்கு விளைந்து இருந்த மேரக்காய்கள் தப்பின

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குஞ்சப்பனை, கருக்கியூர், கிலிப்பி, செம்னாரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் அங்கு உள்ள மரங்களில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கு கின்றன.

    எனவே சமவெளி பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் பலாப்பழங்களை பிடுங்கி தின்பதற்காக ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. இவை அந்த பகுதியில் தற்போது நிரந்தரமாக முகாமிட்டு உள்ளன. அப்போது ஒருசில நேரங்களில் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை, முல்லை நகர் பகுதியில் விவசாயி பிரவீன் என்பவர் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் மேரக்காய் பயிரிட்டு உள்ளார். மேலும் தோட் டத்தை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாகுபடி செய்து இருந்தார்.

    இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானைகள் வந்தன. அப்போது அவை வாழை மரங்களை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தன. ஆனால் மேரக்காய் தோட்டத்திற்குள் நுழையவில்லை. இதனால் அங்கு விளைந்து இருந்த மேரக்காய்கள் தப்பின.

    இதுகுறித்து விவசாயி பிரவீன் கூறுகையில், மேரக்காய் தோட்டத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து இருந்தால் அறுவடைக்கு தயாரான மேரக்காய்கள் வீணாகி, சுமார் ரூ.8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். காட்டுயானைகள் மீண்டும் வராமல் தடுக்க, மீதமுள்ள வாழை மரங் களை வெட்டி சற்று தொலைவில் உள்ள சாலையில் போட்டு உள்ளோம். ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கூடலூர் சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை
    • வாகனங்களில் வருவோரிடம் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை

    ஊட்டி,

    கேரளத்தில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி விட்டனர். அங்கு மேலும் 2 பேர் நோய்த்தொற்றுடன் உள்ளனர். அவர்களுக்கு கோழிக்கோடு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு பகுதிக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கேரள மாநிலத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வாக னங்கள் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளாவின் அண்டை மாவட்டமாக உள்ள நீலகிரியில் மருத்துவ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக கூடலூரில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூா், நம்பியாா்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதார அதிகாரிகள் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும் பணிகளை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் இருந்து புறப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பாக தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×