search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி தேனாடு காலனிக்கு ரோடு வசதி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு வாழ்த்து
    X

    கோத்தகிரி தேனாடு காலனிக்கு ரோடு வசதி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு வாழ்த்து

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாடு ஊராட்சி புதுகாலணியில் கடந்த 50 ஆண்டுகளாக சாலைவசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தேனாடு ஊராட்சி புது காலனி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார், அந்த பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி தேனாடு புது காலணியில் சாலைபணிகள் தொடங்கியது. நிகழ்ச்சி யில் தேனாடு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அம்ச வேணி, மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் (எல்.பி.எப்) முருகன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், நீலகிரி மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், இளைஞர்அணி சிவனேசன், புதுகாலனி வார்டு உறுப்பினர் வில்சன், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், தினேஷ், சக்திவேல்,விநாயகம், மணியப்பன், முருகன், கருணா, சிவகுமார், கமல், ஜோதி, நாகேந்திரன், திருச்செல்வம், அல் போன்ஸ், வினோத், விகன்ஸ், சசி, சிவா, அனந்தன், சுவிதா, லக்ஷ்மி, நேசமணி, மகாலக்ஷ்மி, சண்முகசுந்தரி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது தேனாடு புதுக்காலனியில் ரோடு வசதி அமைத்து தர ஏற்பாடு செய்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×