என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ் கோத்தகிரியில் வனத்துறை சார்பில் வனவிலங்கு விழிப்புணர்வு முகாம்
    X

    கீழ் கோத்தகிரியில் வனத்துறை சார்பில் வனவிலங்கு விழிப்புணர்வு முகாம்

    • மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அடுத்த தேனாடு கிராமத்தில் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இடையே பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்குதல், வனவிலங்கு-மனித மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கீழ்கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமை தாங்கினார். வனஅதிகாரிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

    இம்முகாமில் தேனாடு, கோக்கால் கிராமத்தினர் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டுஉறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது பொதுமக்களின் சந்தேகத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×