search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1000 ஆயிரம் உரிமைத்தொகை பெண்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்- அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்
    X

    ரூ.1000 ஆயிரம் உரிமைத்தொகை பெண்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்- அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்

    • மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.
    • நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1598 பெண்களுக்கு பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண் டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.

    மேலும் பெண்களுக்காக நடப்பு பட்ஜெட்டில் வெளி யான மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு, நாடெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் பட்டு உள்ளது.

    ஒரு ஆணின் வெற்றிக் கும், குழந்தைகளின் கல்விக்காகவும், குடும் பத்திற்காகவும் தன்னலம் கருதாமல், உடல் நலம் பாராமல் பெண்கள் உழை த்து வருகின்றனர். இப்படி கணக்கில் அடங்காத அளவில் வேலை பார்க்கும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது சாதாரணமான திட்டம் அல்ல என்பதால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று தொடங்கி வைத்துஉள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சாம்சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்,வட்டாட்சியர் சரவணன்குமார், நகர மன்ற தலைவர் வாணிஸ் வரி, நஞ்சநாடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஊட்டி நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×