என் மலர்tooltip icon

    நீலகிரி

    • முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு
    • மேலூர் விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் எந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில வேளாண்எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவை சேர்ந்த 27 விவசாயிகளுக்கு ரூ.19.93 லட்சம் மானியத்தில் 21 பவர் டில்லர்கள், 6 விசைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக குன்னூர் இளித்தொரையில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 3 பேருக்கு விளை களையெடுப்பான் கருவிகளை வழங்கினார்.

    தமிழக அரசிடம் மானிய விலையில் பவர் டில்லர் பெற்ற சுள்ளிக்கூடு விவசாயி கோபால் என்பவர் கூறுகையில், எனக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 நாட்கள் செய்யும் வேலையை 3-4 மணி நேரத்தில் முடித்து விடலாம். இது எனக்கு வேளாண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

    சாந்தி கூறுகையில் இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நானும் என்னை போன்ற விவசாயிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

    • தனியார் கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்
    • நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக மரம் நடு விழா நடைபெற்றது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கருவி அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் கே.பி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சுற்றுசூழல் பசுமை பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவன பொறுப்பு முதல்வர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார், இந்தியாவின் மர மனிதன் விருது பெற்ற பசுமை போராளி யோகநாதன், அனைத்திந்திய வக்கீல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் செவ்விளம் பரிதி மற்றும் வக்கீல் தமிழரசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

    பின்பு மாணவர்களுக்கு மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ்களை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் சுகாதார தூதுவர் மல்லிகா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான ஊக்குவிப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இயற்கை வாழ்வியல் கல்வி மற்றும் பயிற்சியின் மாணவர்களுக்கு அளிக்கும் இந்த நிகழ்ச்சியை கருவி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. முன்னதாக 2022 -ம் ஆண்டுக்கான பசுமை முதல்வன் விருது பெற்ற கருவி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் சிரில் ஹென்றி வரவேற்றார். கருவி அறக்கட்டளை துணைத்தலைவர் உதயன் நன்றி கூறினார். பின்பு மரம் நடு விழா நடைபெற்றது. 

    • போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது
    • சமுதாய தலைவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி அங்கு உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி போராட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்காக அவர்கள் கேத்தி பகுதியில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தக்குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், தேனாடு லட்சுமணன், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஜெய்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன
    • பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    பாரத பிரதமர் மோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர பா.ஜ.க தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊட்டி நகர அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கட்சிக்கொடி ஏற்றிவைத்து பேசுகையில், ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழிலாளர்களிடம் மத்திய அரசின் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, பா.ஜ.க சார்பில் ஒருநாள் உணவு வழங்கப்பட்டது. அப்போது அங்கு உள்ள குழந்தைகள், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டசெயலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ், நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், ருத்கார்த்திக், துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், சுதாகர், தேவி, செயலாளர்கள் அபிராமி, பிரவீன்குமார், பிலோமினா, சுற்றுச்சூழல் பிரிவு விசாலி, வெங்கடேஷ், கண்ணன், நாகராஜ், விளையாட்டுபிரிவு ரகு மற்றும் உதயா, ஐ.டி.விங் மல்லிகா, பிரசாந்த், மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும்.
    • காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தற்போது காட்டுக்குள் இருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டு யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.

    எனவே அவற்றின் நடமா ட்டத்தை பொதுமக்களால் சரிவர கணிக்க முடியவில்லை. இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கூடலூர் பகுதியில் அதிநவீன கேமிராக்களுடன் கூடிய எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பது என வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதன்ஒருபகுதியாக அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கருதப்படும் முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்பட 18 பகுதிகளில் அதிநவீன காமிராக்களுடன் எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிதர்காடு வனச்சரக அதிகாரி ரவி கூறுகையில்,

    ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கேமிரா, சிம்கார்டு மற்றும் சைரன் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

    எச்சரிக்கை கோபுரத்தில் உள்ள தானியங்கி கேமிரா மூலம் நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும். அவை உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும். இதனால் பொதுமக்கள் சுதாரித்து கொண்டு தப்பி பிழைக்கலாம். வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார். 

    சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    அருவங்காடு

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 1மணியளவில் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டிதீர்த்தது.

    அதிலும் குறிப்பாக அருவங்காடு பகுதியில் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெலிங்டன், பேரக்ஸ், சின்னவண்டிச்சோலை, ஜெகதளா, சேலாஸ், கொல க்கம்பை, தூதூர்மட்டம் ஆகிய பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டியது.இதனால் அந்த பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. எனவே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். மேலும் ஊட்டி-குன்னூர் சாலையில் கனமழை காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்றன.

    வெலிங்டன் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக, அந்த பகுதியில் மணல் குவியல், மலை போல கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் நேற்று பெய்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. எனவே சேறும் சகதியுமாக போக்குவரத்து சாலை மாறியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் தத்தளித்து சென்றன.தொடர்விடுமுறையை யொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் அவசர தேவைக்கு கூட உரிய நேரத்தில் செல்ல வழியின்றி வாகனஓட்டிகள் அவதிப்ப ட்டனர்.எனவே நீலகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் மழைகாலங்களில் முன்எ ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பெதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நள்ளிரவு அங்கு வந்த யாரோ மர்மநபருக்கும் ராஜேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 47). சமையல் தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே பிளாட்பாரத்தில் தங்கி இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் நேற்று மாலை நேரு விளையாட்டு மைதானத்துக்கு திரும்பினார். அவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து விட்டு ஆடீஸ் வீதியில் உள்ள பெட்டிக்கடை அருகே படுத்து இருந்தார். நள்ளிரவு அங்கு வந்த யாரோ மர்மநபர்களுக்கும் ராஜேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் உருட்டு கட்டையால் ராஜேசின் தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இன்று காலை சமையல் தொழிலாளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் தலைமையில் சம்பவஇடத்து க்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட ராஜேஷ் வைத்து இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையல் தொழிலா ளியை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் காந்திபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது கஞ்சா புகைக்க வந்த வாலிபர்களுக்கு இடையே மோதலில் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு மேமராக்களில் கொலை கும்பல் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொலை நடத்த பகுதியில் ஏற்கனவே 2 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
    • தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.

    எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

    • பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
    • கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அவை உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்தில் ஒரு கரடி நேற்று புகுந்தது. அங்கு அங்கு உள்ள பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா். சேசலாடா குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்த கரடி, பின்னா் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு சென்று விட்டது.

    எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா். 

    இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    அருவங்காடு,

    நீலகிரியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். அந்த நேரத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து குன்னூர் தீயணைப்புதுறை சார்பில் அங்கு உள்ள சுற்றுலா தலங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தண்ணீரில் அடித்து செல்லப்படுவோரை எப்படி மீட்பது, எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து ஊழியர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

    அப்போது மண் சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது, வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். 

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மணியபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் பேபிமுத்து முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் செல்வகுமாரி, செயல்அலுவலர் நட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் நடைபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. 

    • நீலகிரி மாவட்டம் தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் பொதுமக்கள். மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கீழ் கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமைதாங்கினார்.

    அப்போது வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. பொதுமக்களின் சந்தேகத்திற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

    விழிப்புணர்வு முகாமில் தேனாடு, கோக்கால், மெட்டுக்கல் கிராம பொதுமக்கள் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×