என் மலர்
நீங்கள் தேடியது "அருவங்காடு"
அருவங்காடு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 1மணியளவில் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டிதீர்த்தது.
அதிலும் குறிப்பாக அருவங்காடு பகுதியில் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெலிங்டன், பேரக்ஸ், சின்னவண்டிச்சோலை, ஜெகதளா, சேலாஸ், கொல க்கம்பை, தூதூர்மட்டம் ஆகிய பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டியது.இதனால் அந்த பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. எனவே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். மேலும் ஊட்டி-குன்னூர் சாலையில் கனமழை காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்றன.
வெலிங்டன் அருகே சாலை பராமரிப்பு பணிக்காக, அந்த பகுதியில் மணல் குவியல், மலை போல கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் நேற்று பெய்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. எனவே சேறும் சகதியுமாக போக்குவரத்து சாலை மாறியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் தத்தளித்து சென்றன.தொடர்விடுமுறையை யொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் அவசர தேவைக்கு கூட உரிய நேரத்தில் செல்ல வழியின்றி வாகனஓட்டிகள் அவதிப்ப ட்டனர்.எனவே நீலகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் மழைகாலங்களில் முன்எ ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பெதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






