என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.பி.எஸ். கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்
    X

    கே.பி.எஸ். கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்

    • தனியார் கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்
    • நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக மரம் நடு விழா நடைபெற்றது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கருவி அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் கே.பி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சுற்றுசூழல் பசுமை பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவன பொறுப்பு முதல்வர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார், இந்தியாவின் மர மனிதன் விருது பெற்ற பசுமை போராளி யோகநாதன், அனைத்திந்திய வக்கீல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் செவ்விளம் பரிதி மற்றும் வக்கீல் தமிழரசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

    பின்பு மாணவர்களுக்கு மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ்களை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் சுகாதார தூதுவர் மல்லிகா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான ஊக்குவிப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இயற்கை வாழ்வியல் கல்வி மற்றும் பயிற்சியின் மாணவர்களுக்கு அளிக்கும் இந்த நிகழ்ச்சியை கருவி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. முன்னதாக 2022 -ம் ஆண்டுக்கான பசுமை முதல்வன் விருது பெற்ற கருவி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் சிரில் ஹென்றி வரவேற்றார். கருவி அறக்கட்டளை துணைத்தலைவர் உதயன் நன்றி கூறினார். பின்பு மரம் நடு விழா நடைபெற்றது.

    Next Story
    ×