என் மலர்
நீலகிரி
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது20). இவர் அடிக்கடி செல்போனில் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அஜித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் 2 பேரும் அடிக்கடி முகநூலில் பேசி வந்தனர். அப்போது ஒருநாள் அஜித்குமார் சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருருவரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அஜித்குமார் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாயமான சிறுமி அஜித்குமாருடன் பந்தலூருக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அஜித்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு கடத்தி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
பின்னர் எர்ணாகுளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. மேலும் சிறுமியை கடத்துவதற்கு அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை தேவாலா மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்துவதற்கு உதவிய அஜித்குமாரின் தாய் மற்றும் தங்கை மீது போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, நெலாக்கோட்டை பஜாரில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.
தற்போது அந்த கடை மூடப்பட்டதை அடுத்து போலீஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த பகுதியில் ஒரு ஆட்டோவில் விற்பனைக்காக மதுபாட்டில்களை ஒருவர் இறக்கி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சித்திரகனி (வயது52) என்பதும், அந்த பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் நெலாக்கோட்டையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து ஓட்டலில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஆட்டோ மற்றும் ஓட்டலில் வைத்திருந்த, 170 வோட்டர் பாட்டில்கள், 21 பீர் பாட்டில்கள் என மொத்தம் 191 சரக்கு பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:
மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரியில் அடர்ந்த வனப்பகுதிகள் ஏராளமாக உள்ளன. வனத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், வரையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர அரிய வகை பறவைகள் அதிகம் வசித்து வருகின்றன.
கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன . இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வனவிலங்குகள் தடமாறி ஊருக்குள் புகுந்துவிடுகிறது.
ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்புவாசிகள் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு வனவிலங்குகளிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி. இந்த பள்ளி வளாகத்திற்குள் நள்ளிரவில் சிறுத்தை புகுந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, ராணுவ பயிற்சி கல்லூரி நிர்வாக அலுவலர் கர்னல் சன்னி குரியன், வனவர் ராஜ்குமார் ஆகியோர் சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு செய்தனர்.
கோடைகாலம் தொடங்கியதும் சிறுத்தை ராணுவப்பள்ளிக்குள் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ குடும்பத்தினர் காலை, மாலை நேரங்களில் நாய்களுடன் நடைபயிற்சி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர காவலர்களுடன் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வெலிங்டன், ஜிம்கானா, கம்பிசோலை, ராணுவ பகுதிகளில் சிறுத்தை உணவிற்காக நாய், கோழிகளை தேடி வருகிறது. எனவே நாய்களுடன் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுதி உள்ளோம்.
மேலும் குன்னூர் ராணுவ மையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, பழம், மளிகை கடை என540-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த தினசரி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிச்செல்வார்கள். பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட்டில் நேற்று மாலை வியாபாரிகள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள பழனியம்மாள் என்பவரது பழக்கடையில் இருந்து லேசான தீயுடன் கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்குள்ளவர்கள் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென மற்றக்கடைகளுக்கும் பரவத்தொடங்கியது.
மேற்கூரைகள் தகரத்தால் வேயப்பட்டிருந்ததால் எளிதில் மற்ற கடைகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கின.
தீ விபத்து குறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் இமானுவேல், கோத்தகிரி நிலைய அலுவலர் அர்ஜூனன், குன்னூர் நிலைய அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதும் தீ கட்டுக்குள் வரவில்லை. 6 வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விடியவிடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 5 மணிக்கு தீயை முற்றுலும் அணைத்தனர். இதில் 2 மளிகை கடைகள், 1 பூக்கடை, 8 பழக்கடைகள் என 11 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தால் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. 11 கடை உரிமையாளர்களும் எரிந்த கடை முன்பு கண்ணீருடன் சோகமாக நின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டமம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு உள்ளது. இந்த யானை அப்பகுதியில் உள்ள பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டங்களில் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக்கொல்லி மாங்களாச்சிகுன்னு பகுதிக்குள் காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவரது வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.
அப்போது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சந்திரன் பயத்தில் எழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரையும் யானை தாக்கியது. இருப்பினும் சந்திரன் காட்டு யானையிடம் இருந்து தப்பி ஓடினார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்த பொருட்களை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த சந்திரனை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும். மேலும் ஊருக்குள் மீண்டும் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு சந்திரன் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது மீண்டும் அவரது வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் ஓடக்கொல்லி, கோழிக்கண்டி, கரிச்சன கொல்லி, தேன்கொல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இந்த யானை தோட்ட பகுதியில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
ஊட்டி நகரில் கடந்த மாதம் 20-ந் தேதி ஒருவர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். போலீசார் சிவக்குமாரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தோடும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் உத்தரவையடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு ரேலியா அணை, கரன்சி, பந்துமி, கிரேஸ் ஹில், மற்றும் வண்ணாரப்பேட்டை நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரேலியா அணையில் தண்ணீர் முழு கொள்ளளவு இருந்தும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதில்லை.
குன்னூர் 12-வது வார்டு ஹவுசிங் யூனிட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் தனியாக 3 தண்ணீர் தேக்க தொட்டிகள் உள்ளன. இதில் தண்ணீர் இருந்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. இதைப்பற்றி குன்னூர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் 1 மணி நேரம் மட்டும் தண்ணீர் வினியோகம் செய்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையான அளவு கிடைப்பதில்லை. முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் தேவர்சோலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி கண்டு பிடித்தனர். மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 44) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டினார். இதனால் அச்சம் அடைந்த மாணவி மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 204 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 479 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தமாக 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர்.
வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடிகளில் பார்த்து கொள்ளலாம்.
மேலும் அந்த வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி வனக்கோட்டம் கட்டபெட்டு வனச்சரகம் கடக்கோடு கிராமம் பகுதியில் உள்ள ஒருதனியார் தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கட்டபெட்டு வனவர்கள் சசிதரன் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கருஞ்சிறுத்தை இறந்து கிடந்ததை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி உதவி வனப்பாதுகாவலர் சரவண குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு, கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் பிரேத பரிசோதனை செய்தபின் அதே பகுதியில் எரிக்கப்பட்டது.
உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, 3 வயதுடைய பெண் கருஞ்சிறுத்தை நேற்று முன்தினம் இறந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. உடல் கூறுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகே கருஞ்சிறுத்தை இறப்பு குறித்து முழு விபரம் தெரியவரும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






