என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கூடலூரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் தேவர்சோலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி கண்டு பிடித்தனர். மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 44) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டினார். இதனால் அச்சம் அடைந்த மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதனையடுத்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×