search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி ராணு பள்ளியில் புகுந்த சிறுத்தை.
    X
    ஊட்டி ராணு பள்ளியில் புகுந்த சிறுத்தை.

    குன்னூரில் நள்ளிரவில் ராணுவ பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை- பொதுமக்கள் பீதி

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் நள்ளிரவில் சிறுத்தை புகுந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    ஊட்டி:

    மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரியில் அடர்ந்த வனப்பகுதிகள் ஏராளமாக உள்ளன. வனத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், வரையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர அரிய வகை பறவைகள் அதிகம் வசித்து வருகின்றன.

    கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன . இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வனவிலங்குகள் தடமாறி ஊருக்குள் புகுந்துவிடுகிறது.

    ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்புவாசிகள் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு வனவிலங்குகளிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி. இந்த பள்ளி வளாகத்திற்குள் நள்ளிரவில் சிறுத்தை புகுந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, ராணுவ பயிற்சி கல்லூரி நிர்வாக அலுவலர் கர்னல் சன்னி குரியன், வனவர் ராஜ்குமார் ஆகியோர் சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு செய்தனர்.

    கோடைகாலம் தொடங்கியதும் சிறுத்தை ராணுவப்பள்ளிக்குள் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ குடும்பத்தினர் காலை, மாலை நேரங்களில் நாய்களுடன் நடைபயிற்சி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர காவலர்களுடன் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வெலிங்டன், ஜிம்கானா, கம்பிசோலை, ராணுவ பகுதிகளில் சிறுத்தை உணவிற்காக நாய், கோழிகளை தேடி வருகிறது. எனவே நாய்களுடன் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுதி உள்ளோம்.

    மேலும் குன்னூர் ராணுவ மையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×