search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீலகிரி மாவட்டத்தில் 5,76,691 வாக்காளர்கள்

    நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 204 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 479 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தமாக 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 204 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 479 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தமாக 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர்.

    வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடிகளில் பார்த்து கொள்ளலாம்.

    மேலும் அந்த வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×