என் மலர்
நாமக்கல்
- நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
- மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.
பரமத்திவேலூர்:
நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி அன்று அம்மன் சன்னதிகளிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் 9 படிகள் அமைத்து பல விதமாக சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலுவாகும். மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.
பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொலு பொம்மை கடைகளில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி கூறுகையில், கொலு பொம்மைகளை களிமண்ணாலும், காகிதகூழ் மூலமாகவும் தயாரித்து விற்பனை செய்கிறோம். சாய்பாபா, லட்சுமி, கிருஷ்ணர், ராமர், சரஸ்வதி, சீதை, விநாயகர் என 50-க்கும் மேற்பட்ட சாமி பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறினார்.
- மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
- சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார்.
நாமக்கல்:
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர். சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி, அங்கன்வாடி பணியாளர்கள் மாநில உதவி தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.
குறைந்த பட்ச ஊதியம்
ஆர்ப்பாட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். பணிநேரம், பணிளை வரைமுறை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை.
- நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (46). இவர்களுக்கு புனிதா(29) என்ற மகளும், கண்ணதாசன்(26) என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். கண்ணதாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கண்ணதாசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பெரியசாமி, சாந்தா ஆகியோர் வீட்டின் விட்டத்தில் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் பெரியசாமி, சாந்தாவின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இவருடைய மனைவி சாந்தாவுக்கும் கர்ப்பப்பை கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தா தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அடிக்கடி வலியால் சாந்தாவும், பெரியசாமியும் அவதிபட்டு வந்தனர்.
இதனிடையே இவர்களது மகன் கண்ணதாசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரின் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததாலும், நோய் தாக்கத்தாலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
- ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
- மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி ஜே.கே.கே ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர்.
- கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
- கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவ பயிற்சி.
நாமக்கல்:
நாமக்கல் மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:-
கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு குறித்த விளக்க பயிற்சி பட்டறை நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்ணையாளர்களுக்கு லாபகரமான கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில், பண்ணையாளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது.
- இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று என்இசி சார்பில், மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட் டையின் பண்ணை கொள் முதல் விலை 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விற்பனை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்துக் கொண்டனர். தற்போது, புரட்டாசி முடியும் தருவாயில் முட்டையின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
- தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
- தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
- அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
- வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆஸ்பத்திரி முன் பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் பேரூராட்சி பணியாளர்கள் அக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப் பாளர்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருவம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதன் பேரில் இன்று காலி செய்ய வேண்டுமென போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
- நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
- அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் அவ்வப்போது உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள், பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் என மொத்தம் 45 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 5 கடைகளில் இருந்து 24 கிலோ சுகாதார மற்ற சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி மற்றும் பிற உணவு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுபோல் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும். ஓட்டல்களில் சுகாதாரமற்ற இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்.
- பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள் மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கோபால், நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன், நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேற்று முன்தினம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சாலை, பஸ் நிலையம், பள்ளிசாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.
- ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.
ஆழமான பகுதியில்...
இவர் தனது நண்பருடன் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துபோது எதிர்பாராத விதமாக ராஜாவாய்க்காலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதை பார்த்த ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ராஜா வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட அஜீத்தை நேற்று மாலை வரை தேடினர். இரவு ஆகிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டனர்.
2-வது நாளாக
இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை 8 மணி முதல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுமூலம் அஜீத்தை தீவிரமாக தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
அஜீத் குளித்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கரைேயாரம் தண்ணீரில் காலை 9.15 மணி அளவில் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரை உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து அவரது உடல் போலீசார் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






