பரமத்திவேலூரில் பேக்கரி, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை

தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்திய காட்சி.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்திய காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com