ஜேடர்பாளையம் ராஜாவாய்க்காலில் குளித்தபோதுஇழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்இன்று பிணமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.‌ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஜேடர்பாளையம் ராஜாவாய்க்காலில் குளித்தபோதுஇழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்இன்று பிணமாக மீட்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.

ஆழமான பகுதியில்...

இவர் தனது நண்பருடன் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துபோது எதிர்பாராத விதமாக ராஜாவாய்க்காலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இதை பார்த்த ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ராஜா வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட அஜீத்தை நேற்று மாலை வரை தேடினர். இரவு ஆகிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டனர்.

2-வது நாளாக

இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை 8 மணி முதல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுமூலம் அஜீத்தை தீவிரமாக தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

அஜீத் குளித்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கரைேயாரம் தண்ணீரில் காலை 9.15 மணி அளவில் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரை உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து அவரது உடல் போலீசார் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com