நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.510 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.510 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று என்இசி சார்பில், மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட் டையின் பண்ணை கொள் முதல் விலை 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விற்பனை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்துக் கொண்டனர். தற்போது, புரட்டாசி முடியும் தருவாயில் முட்டையின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com