என் மலர்
நாமக்கல்
- சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
- உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்:
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின்போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையா கவும் உழைக்கும் அதிகாரி கள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
2023-ம் ஆண்டு, சர்வ தேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாரா யணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்-டிவிஷன் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்தி ரம் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டி யலில், நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது.
- தொழிற்பேட்டை அமைப்ப தற்காக அப்பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது. இதையொட்டி தொழிற்பேட்டை அமைப்ப தற்காக அப்பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாயம் பாதிக்கப்படும், இயற்கை சூழல் பாதிக்கப்படும், மேலும் சிப்காட் அமைப்ப தற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களையும், பல்வேறு அரசு உயர் அதி காரிகளையும் அவர்கள் சந்தித்து வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் முடிவை கைவிடக்கோரி மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்ப தைக் கைவிடக்கோரி, சிப் காட் எதிர்ப்பு குழு சார்பில், வளையப்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக் குழு ஒருங்கி ணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேலு, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொ.ம.தே.க., ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகி யோர் சிப்காட் தொழிற் பேட்டை திட்டத்தை கை விட வலியுறுத்தி பேசினர். விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள் தண்ட பாணி, ராமசாமி, சிப்காட் எதிர்ப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயி கள் உள்ளிட்ட பலர் போராட்ட த்தில் கலந்துகொண்டனர்.
- ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.
- இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.
இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை. இதனால் முருகேசன் விரக்தியில் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக வயிறு எரிச்சல் ஏற்படுவே சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், முருகேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மகன் பூபதி (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலை யத்துறை சார்பில், ஏழை, எளியோருக்கு வருகிற
28-ந் தேதி இலவச திரு மணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், புதிய ஆடை, திருமணத்துக்கு வரும் மணமக்களின் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மணமக்க ளுக்கு வாட்ச், மிக்ஸி, சமை யல் பாத்திரங்கள் மற்றும் திருமணத்துக்கு தேவையான மாலை, பூஜை சாமான்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும், அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி கள் திருமணம் செய்ய உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து இருந்தனர். இவர்க ளுக்கு மோகனூரில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆல யத்தில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இதையடுத்து, மணமக்களின் பெற்றோரும் பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு கொடுத்த நிலையில், திருமண தேதியை ஜூலை 7-ந் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வருகிற ஜூலை 7-ந் தேதி தேய்பிறை முகூர்த்தம் என்பதால், திருமணம் செய்ய மணமக்களின் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் திருமணம் செய்ய பதிவு செய்தவர்கள் தேதி மாற்றத்தை விரும்பாமல் 28-ந் தேதியே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள னர்.
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இலவச திருமணம் செய்ய 8 மண மக்கள் ஜோடி பதிவு செய்தி ருந்தனர். தேதி மாற்றத்தால் 6 மணமக்கள் ஜோடிகள் பதிவை ரத்து செய்துவிட்டு வரும் 28-ந் தேதியில் முகூர்த்தம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருமண தேதி மாற்றத் தால் மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள் ளனர். இது குறித்து அற நிலையத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது,
இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தர வின் பேரில் தேதி மாற்றப் பட்டுஉள்ளது. இதற்குரிய காரணம் எங்களுக்கு தெரியவில்லை. வருகிற 7-ந் தேதி இலவச திருமணம் நடக்க இருப்பதால், தகுதி உடைய மணமக்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர்.
- துரைசாமி (வயது 45). இவரது மனைவி மீனா (37). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று, துரைசாமி மது அருந்திவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் மீனாவை திட்டி உள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே சாலப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் துரைசாமி (வயது 45). இவரது மனைவி மீனா (37). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று, துரைசாமி மது அருந்திவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் மீனாவை திட்டி உள்ளார். அப்போது துரைசாமியின் உறவினர்கள் மாச்சநாய்க்கர், அவரது மனைவி ரேவதி, மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து மீனாவை தாக்கி உள்ளனர்.
இதை தட்டி கேட்ட மீனாவின் தந்தை நாகசாமி யையும் தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். இதில் காயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மீனா, நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் துரைசாமி, மாச்சநாயக்கர், ரேவதி, குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் துரைசாமியும், தன்னை நாகசாமி, கவின், தன்ராஜ், சக்திவேல் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக கூறி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், நல்லூர் போலீசார் நாகசாமி, கவின், தன்ராஜ், சக்திவேல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
- குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.
நாமக்கல்:
நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது போக்சோ, வீடு புகுந்து திருட்டு, கார் திருட்டு, உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென அவர் ஏறினார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் இதற்காக செல்போன் டவரில் ஏறியதாகவும் கூறி அவர் கூச்சலிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு உற்றார், உறவினர் யாரும் கிடையாது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
2-10-2017 அன்று அவர் சேலம் மத்திய சிறைக்கு வந்தார். அப்போது நான் ஒரு கார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தேன்.
அன்று அவர் எங்கள் முன் பேசிய வார்த்தைகளும் செயலும் என் உள்ளத்தில் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பை கண்டேன். குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.
நான் திருந்துவதற்கு காரணம் நீங்கள் தான். மாணவர்கள் முயற்சி பண்ணுங்க என நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே.
உங்கள் பேச்சைக் கேட்டு நான் தற்போது திருந்தி விட்டேன். நான் இதற்கு முன்பு பலமுறை தங்களை பார்க்க வேண்டும் என முயற்சி செய்தேன்.
வருடப்பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்கு சென்ற போது உங்களை தூரத்திலிருந்து பார்த்தேன்.ஆனாலும் தொடர்ந்து உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தான் தொடர்ந்து முயற்சியை கொண்டுள்ளேன்.
இந்த கடிதத்தை யார் பார்த்தாலும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழக டி.ஜி.பி.-ஐ பார்க்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.
இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.
- கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.
- முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும்.
நாமக்கல்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேந்தமங்கலம் ஒன்றியம், மலைவேப்பங் குட்டை, உத்திரகிடிகாவல் கிராமத்தில், நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை யுடன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.
இம்முகாமில், கால்நடை களுக்குத் தேவையான அனைத்து விதமான சிகிச் சைப் பணிகள், வெறிநாய் தடுப்பூசி, ராணிக்கட் தடுப்பூசி, சிறிய அறுவை சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், அல்டரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், அசோலா, புல்நறுக்கும் கருவி, புல்கரணைகள், தூய்மையான பால் உற்பத்தி, அறிவியல் முறையில் கால் நடை வளர்ப்பு தொடர்பான விவரங்கள் கொண்ட கண் காட்சி நடைபெறும். விவசா யிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அனைவரும் இக்கண்காட்சியை பார்வை யிட்டு பயன்பெறலாம்.
முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய் வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக் கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும். முடிவில், சிறந்த கன்று பராமரிப்புக்கு பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.
மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரண மாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகி றது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறை களை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாது காப்பதோடு, பயிர் விளைச் சலையும் அதிகரிக்கலாம். இதற்கு ஒரே வழி மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதே ஆகும்.
எப்படி எடுக்கலாம்?
மாதிரி எடுக்கும் ஆழம் புல் மற்றும் புல்வெளி 2 அங்குலத்தில் 5 செ.மீ, நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சில தானியப் பயிர்கள் 6 அங்குலம் 15 செ.மீ, பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் 9 அங்குலம் 22 செ.மீ, நிரந்தரப்பயிர்கள் , மழைப்பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 12, 24, 36 அங்குல ஆழங்களில் 3 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். 30, 60, 90 செ.மீ ஆழங்களில் 3 மண் மாதிரி களை எடுக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும், குறுக் கும் , நெடுக்கமாக நடந்து அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, மண்ணின் நிறம், நயம், மேலாண்மைமுறை பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல் பல பகுதி களாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தனித்தனி யாக மண்மாதிரி சேகரிக்க வேண்டும். முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய எரு மற்றும் குப்பை உரங்கள் பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மாதி ரிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயலின் வரப்பு பகுதிகள், வாய்க் கால்கள், மரத்தடி நிழல், உரக்குழிகள், கிணற்றுப் பகுதி இவற்றிலும் மண்மாதிரி எடுக்கக்கூடாது.
அதிகபட்சமாக 5 ஹெக்ட ருக்கு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் ஹெக்டேருக்கு ஒரு மாதிரி யும் தயாரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்கலாம். உர மிட்டவுடன் சேகரிக்கக்கூ டாது. குறைந் தது 3 மாதம் இடை வெளி தேவை. பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. மண்மாதிரி எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், கற்கள் போன்ற வற்றை முறையாக வயல்மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
மண்வெட்டி கூடாது
மண் மாதிரி எடுக்கும் போது ஆங்கில எழுத்து வி போல் மண்வெட்டியால் இரு புறமும் வெட்டி அவ்விடத்தில் உட்புற மண்ணை நீக்கிவிட வேண்டும். பின்பு வி யின் இருபுற மும் 15 செ.மீ அளவு கரண்டி மண்மாதிரி சேக ரிக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஹெக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதி ரிகள் சேகரிக்கவேண்டும். ஈரமான மண்மாதிரிகளாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்தவேண்டும். நுண்ணூட்டங்கள் அறிய வேண்டும் என்றால் எவர் சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் மண்மாதிரி களை எடுத்து பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி மற்றும் இரும்புச் சட்டிகளை பயன்படுத்தக் கூடாது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒரு பிளாஸ் டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண்மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும். மண்ணை சுத்த மான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி அதை 4 ஆக பிரித்து அரை கிலோ அளவு வரும்வரை திரும்ப திரும்ப கையாளவேண்டும்.
மேற்கூறப்பட்ட வழி முறைகளை பின்பற்றி விவ சாயிகள் மண் மாதிரிகள் எடுத்து கொடுத்து அன்றே பரிசோதனை முடிவுகளை யும் பெற்றுப் பயனடைய கேட்டுக் கொள்ளப்படு கிறது.
- இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
- பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 6 முதல் 12 வயதுடைய அனைத்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:-
பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியத்திற்கும் கண்கா ணிப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2022–-23ல் மேற்கொள்ளப் பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப் பில் 4,950 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,995 குழந்தைகள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பிறதுறை அலுவலர்கள் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
நாமக்கல் ஒன்றியத்தில், வார்டு எண், 37, 38 நரிக்குறவர் காலனி மற்றும் கீரம்பூர் சுரக்காபாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சாலையூர், மலை வேப்பன் குட்டை, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாயக்கர் வளவு, ஜக்கம்மா தெரு, கபிலர் மலை ஒன்றியம் பல்லா பாளையம் ஆகிய பகுதி களில், இடைநின்ற மாண வர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில், தொழிலா ளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் இணைந்து களப்பணி மேற்கொண்டு, குழந்தை களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் சிவக்கு மார், முதன்மை கல்வி அலு வலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவரும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வரு டங்களாக பொன்னுசாமி தனியாக வசித்து வந்தார்.
- இந்த நிலையில் நேற்று பொன்னுசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவரும் இவ ரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பொன்னுசாமி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பொன்னுசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள் ளது. இதனால் அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பொன்னு சாமி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப்பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப் பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.
சேலம்-கரூர் அகல ரெயில்பாதையில் உள்ள ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின் றன.கொரோனோ காலத்திற்கு முன்பு நின்று சென்ற ரெயில்கள் கூட அதன்பிறகு நிற்பதில்லை. இதனால் ராசிபுரம் பகு தியைச் சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல அருகா மையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று செல்ல வேண்டி உள்ளது.
ஆகையால் ராசிபுரம் பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ராசி புரம் வழியாக செல்லும் சென்னை-பழனி எக்ஸ் பிரஸ் ரெயில், நாகர்கோ வில் -பெங்களூர் எக்ஸ்பி ரஸ் ரயில், நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் கடந்த 15-ந் தேதி ரெயில்வே துறை தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு ஒன்றை அளித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று தற்போது ரெயில்வே துறை ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ராமேஸ்வரம்-ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே துறை அனுமதி அளித்துள் ளது. இதற்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.






