search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்4950 பள்ளி சொல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில்4950 பள்ளி சொல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

    • இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
    • பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 6 முதல் 12 வயதுடைய அனைத்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இதுவரை பள்ளியில் சேராத குழந்தை கள், புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரையும், பள்ளியில் சேர்க்க அரசுத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:-

    பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியத்திற்கும் கண்கா ணிப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2022–-23ல் மேற்கொள்ளப் பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப் பில் 4,950 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,995 குழந்தைகள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பிறதுறை அலுவலர்கள் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க, தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    நாமக்கல் ஒன்றியத்தில், வார்டு எண், 37, 38 நரிக்குறவர் காலனி மற்றும் கீரம்பூர் சுரக்காபாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சாலையூர், மலை வேப்பன் குட்டை, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாயக்கர் வளவு, ஜக்கம்மா தெரு, கபிலர் மலை ஒன்றியம் பல்லா பாளையம் ஆகிய பகுதி களில், இடைநின்ற மாண வர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில், தொழிலா ளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் இணைந்து களப்பணி மேற்கொண்டு, குழந்தை களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் சிவக்கு மார், முதன்மை கல்வி அலு வலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×