என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு; மனித சங்கிலி போராட்டம்
    X

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு; மனித சங்கிலி போராட்டம்

    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது.
    • தொழிற்பேட்டை அமைப்ப தற்காக அப்பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறி வித்துள்ளது. இதையொட்டி தொழிற்பேட்டை அமைப்ப தற்காக அப்பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாயம் பாதிக்கப்படும், இயற்கை சூழல் பாதிக்கப்படும், மேலும் சிப்காட் அமைப்ப தற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களையும், பல்வேறு அரசு உயர் அதி காரிகளையும் அவர்கள் சந்தித்து வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் முடிவை கைவிடக்கோரி மனுக்களை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்ப தைக் கைவிடக்கோரி, சிப் காட் எதிர்ப்பு குழு சார்பில், வளையப்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக் குழு ஒருங்கி ணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேலு, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொ.ம.தே.க., ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகி யோர் சிப்காட் தொழிற் பேட்டை திட்டத்தை கை விட வலியுறுத்தி பேசினர். விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள் தண்ட பாணி, ராமசாமி, சிப்காட் எதிர்ப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயி கள் உள்ளிட்ட பலர் போராட்ட த்தில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×