என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடந்தை அருகே இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
    X

    நடந்தை அருகே இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

    • துரைசாமி (வயது 45). இவரது மனைவி மீனா (37). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று, துரைசாமி மது அருந்திவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் மீனாவை திட்டி உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே சாலப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் துரைசாமி (வயது 45). இவரது மனைவி மீனா (37). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, துரைசாமி மது அருந்திவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் மீனாவை திட்டி உள்ளார். அப்போது துரைசாமியின் உறவினர்கள் மாச்சநாய்க்கர், அவரது மனைவி ரேவதி, மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து மீனாவை தாக்கி உள்ளனர்.

    இதை தட்டி கேட்ட மீனாவின் தந்தை நாகசாமி யையும் தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். இதில் காயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மீனா, நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் துரைசாமி, மாச்சநாயக்கர், ரேவதி, குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் துரைசாமியும், தன்னை நாகசாமி, கவின், தன்ராஜ், சக்திவேல் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக கூறி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், நல்லூர் போலீசார் நாகசாமி, கவின், தன்ராஜ், சக்திவேல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×