என் மலர்
நாமக்கல்
- கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும்,
- கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
நாமக்கல்:
கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் கனிம வள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.
சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
- இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.
- மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களான பெருங்குறிச்சி, திடுமல், தி.கவுண்டம்பாளையம் மற்றும் கோப்பணம்பளையம் ஆகிய கிராமங்களில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.
திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், ஒரு ஹெக்டர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்திட வேண்டும். ஏற்கனவே ஆடுகள் வைத்தி ருப்பவராக இருக்கக்கூடாது. திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருத்தல் கூடாது. ஆதி திராவிடர், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலவுடைமை ஆவணங்க ளான சிட்டா, அடங்கல், ஆதார் எண் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 ஆகியவற்று டன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
- இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மோகனூர் சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10 மணிக்கு, தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், தென்னை நாற்றாங்கால் பராமரிப்பு, குறுகிய காலத்தில் வளரும் தென்னையின் வகைகள், லாபகரமான முறையில் தென்னை வளர்ப்பு, தென்னை ஊட்டச்சத்து, நீர், களை மற்றும் பூச்சி மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் கட்டாயம் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
- இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
மேலும் இவர் ம.தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.
இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாகராஜி டம் புகார் தெரிவித்தனர். நான், நகராட்சி பணியாளர் களிடம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்ட்ஹ நிலையில் களியனூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கவுன்சிலர் சிவம் செல் போனில் தொடர்பு கொண்டு ஆக்கிரிமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தை யால் திட்டியுள்ளார்.
இந்த நிலையில் சிவம் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வெடியரசம் பாளையம் பகுதியில் இருந்து பள்ளி பாளையத்
திற்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த நாகராஜ் தகறாறில் ஈடுபட்டு கல்லால் தாக்க முயன்றதஅக தெரி கிறது.
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் தெரிகிறது. இது பற்றி சிவம் பள்ளிப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வரு கிறார்கள்.
- பரமத்திவேலூர் பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதுதலும், அதனை தொடர்ந்து சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது.
நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மகேஸ்வர பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதே போல் கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் பாண்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானையும், பரமேஸ்வரரையும் தரிசனம் செய்தனர்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதி ரான சர்வதேச உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணா சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரமத்தி வேலூர்:
மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதி ரான சர்வதேச உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணா சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியின் ஆசிரியர்கள் நந்தகுமார், செந்தில், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. பேரணியின் போது பொது மக்களிடையே போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்கள்.
மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி "போதை பொருளை தொடாதே பாதை தவறி கெடாதே" போன்ற முழக்கங்களை எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலகப் பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேரணிக் கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.
- முட்டை பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக நீடிக்கும்.
- முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வ ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தற்போது முட்டை விற்பனை சீராக உள்ளதாகவும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாதலும், தினசரி முட்டை விலை நிர்ணயம் மாற்றும் இன்றி 550 காசுகளாக நீடிக்கும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து முட்டை பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக நீடிக்கும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.128 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- சிவக்குமார் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.
- வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே மாரப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவரது மனைவி புவனேஸ்வரி (42).
சிவக்குமார் சென்னையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணம் ஆகாததால் மாரப்பம்பாளையம் புதூரில் உள்ள தனது தாய் தனலட்சுமி வீட்டிற்கு வந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டு மேற்கூரையின் இரும்புக் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
- சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல்:
கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் கனிமவள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.
சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
- ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.
இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.
தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.






