என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தபோது எடுத்த படம்.
மோகனூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதி ரான சர்வதேச உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணா சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரமத்தி வேலூர்:
மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதி ரான சர்வதேச உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணா சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியின் ஆசிரியர்கள் நந்தகுமார், செந்தில், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. பேரணியின் போது பொது மக்களிடையே போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்கள்.
மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி "போதை பொருளை தொடாதே பாதை தவறி கெடாதே" போன்ற முழக்கங்களை எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலகப் பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேரணிக் கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.






