சோழசிராமணி அருகே சென்னை கல்வி அதிகாரியின் ஜீப் டிரைவர் தற்கொலை

சிவக்குமார் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார்.
சோழசிராமணி அருகே சென்னை கல்வி அதிகாரியின் ஜீப் டிரைவர் தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே மாரப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவரது மனைவி புவனேஸ்வரி (42).

சிவக்குமார் சென்னையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணம் ஆகாததால் மாரப்பம்பாளையம் புதூரில் உள்ள தனது தாய் தனலட்சுமி வீட்டிற்கு வந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டு மேற்கூரையின் இரும்புக் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com