என் மலர்
நாமக்கல்
- வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
- ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது.
பரமத்திவேலூர்;
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அரசு (வயது 17). இவர் பரமத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது உறவி னர் அதே ஊரைச் சேர்ந்த நவீன் (22). இவர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நேற்று பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அரசுடமையாக்கப் பட்ட வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ள னர். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்துள்ளனர்.
அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பணத்தை வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி யிடம் இருவரும் ஒப்படைத்த னர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் விட்டு செல்லப்பட்ட ரூ.20 ஆயிரத்தை பொறுப்பாக போலீசிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் இந்திராணி பாராட்டினார்.
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வந்தவர், பணம் உடனே வராததால் பணம் வரவில்லை என நினைத்து ஏ.டி.எம் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டதும், அதன் பிறகு அங்கு பணம் எடுப்பதற்காக வந்த மாணவர், அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
- கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி இரவு கிராம சாந்தி வழிபாட்டுடன் தொடங்கியது
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால யாக பூஜை, யாத்ரா தானம் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார் பாளையத்தில் திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி, கையில் ஏந்தி நிற்கும் ஒரு டன் எடையும், 30 அடி நீள மும் உள்ள வாள் மற்றும் சுமார் 10 அடிநீளமுள்ள மீசை ஆகியவற்றிக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி இரவு கிராம சாந்தி வழிபாட்டுடன் தொடங்கியது. 27-ந் தேதி அதிகாலை 5.30 மணி அள வில் விநா யகர் வழிபாடு, புண்யாகம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோ மம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அன்று மதியம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 28-ந் தேதி காலை திருப்பதி முனியப்ப சாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜை, மருந்து சாற்றுதலும், மூல மந்திர காயத்ரி மந்திர ஹோமமும் நடைபெற்றது. மாலை அஷ்டலட்சுமி பூஜை, 3-ம் கால பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால யாக பூஜை, யாத்ரா தானம் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் திருப்பதி முனியப்ப சாமிக்கு மகா கும்பாபிஷேகமும், மறு அபிஷேகமும், மகா தீபாரா தனையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது.
விழாவில் பிலிக்கல் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக் தர்கள மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
விழா விற்கான ஏற்பாடு களை சேளூர் சாணார்பா ளையம் திருப்பதி முனி யப்ப சாமி கோவில் மகா கும்பா பிஷேக விழா குழுவி னர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தி ருந்தனர்.
- ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
- அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூபதி (வயது 42). இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
லஞ்சம்
அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூபதி விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ெஜயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிரடி சோதனை
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.1.74 லட்சம் சிக்கியது
நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 10 அரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியது.
இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் நாமக்கல் சட்டம்- ஒழுங்கி பிரிவில் பணியாற்றும் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார், இது ெதாடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அதன்படி கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத இந்த பணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
- அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது.
நாமக்கல்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது. அதன்படி, கலெக்டர் உமா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்
பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்தார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், தனி தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
- மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
கல்லாகுளம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர திருநாளை யொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோவில் பணியாளர் களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கியதன் புகைப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.
- திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், கே.எஸ்.ஆர் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் சரத் அசோகன், நர்சிங் கல்லூரி முதல்வர் ருத்ரா மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா, சேகர், மகேஸ்வரி, செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், தாமரைச் செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி 4 ரத வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தியபடி சென்றனர்.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 415-க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 43.81½ குவிண்டால் எடை கொண்ட 11 ஆயிரத்து 903 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.09-க்கும், சராசரி விலையாக ரூ.21.29-க்கும் என மொத்தம் ரூ. 87 ஆயிரத்து 620-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 191.51½ குவிண்டால் எடை கொண்ட 420 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.49-க்கும், சராசரி விலையாக ரூ.73.19-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.25-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 58 ஆயிரத்து 232-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 18.47 குவிண்டால் எடை கொண்ட 24 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.143.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.135.99-க்கும், சராசரி விலையாக ரூ.135.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.142.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.112.79-க்கும், சராசரி விலையாக ரூ.132.99-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 563-க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 415-க்கு விற்பனையானது.
- வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்.
- இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மகள் தாரணி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் மதுரவேல் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கோபீசன் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் தார ணிக்கும் அப்பகுதியில் உள்ள அஜித்குமார் என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தாரணி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாரணியின் தாய் சசிகலா (47), அவரை அஜித்குமாரிடமிருந்து பிரித்து கூட்டி வந்து கூப்பிட்டாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரர் கதிர்வேல் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கதிர்வேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தாரணியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கதிர்வேல், இது குறித்து தாரணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
தாரணியின் பெற்றோர், அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தாரணி தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
- ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தாரமங்கலம்;
சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளான குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம், பவளத்தனுர்,பாப்பாம்பாடி கரட்டூர்,வணிச்சம்பட்டி ஆகிய பகுதியில் பள்ளிகட்டிட பணிகள், சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பாப்பாம்பாடி தச்சங்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்புகள், ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கிராம ஊராட்சி ரவிச்சந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.
- கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பூபதி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
- 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசாரிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45).
இவர் தற்போது நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் அய்யப்பன் கோவில் எதிரே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
பின்னர் அறையின் கதவுகளை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் பூபதியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் தந்தை வீடு மற்றும் மாமனார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் அடிக்கடி அறை எடுத்து தங்கும் நாமக்கல்லில் உள்ள சாமி லாட்ஜிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பூபதி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது முறைகேடு தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசாரிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் நாமக்கல் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
- குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.
தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
- தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:-
கத்தரி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70, தக்காளி ரூ.70 முதல் ரூ.80,
வெண்டை ரூ.36 முதல் ரூ.40, அவரை ரூ.40 முதல் ரூ.60, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.32 முதல் ரூ.40,
பாகல் ரூ.60 முதல் ரூ.70, பீர்க்கன் ரூ.60 முதல் ரூ.70, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் ரூ.10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் ரூ.10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் ரூ.12,
மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.80, கோவக்காய் ரூ.36,
கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் ரூ.50, பெ.வெங்காயம் ரூ.23 முதல் ரூ.25, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் ரூ.100, கேரட் ரூ.65 முதல் ரூ.75, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் ரூ.20, காளிபிளவர் ரூ.15 முதல் ரூ.25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் கொய்யா ரூ.30 முதல் ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50,
பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் ரூ.25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70 முதல் ரூ.80, வாழை இலை ரூ.30,
மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் ரூ.70, சேனைக்கிழங்கு ரூ.60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ.32 முதல் ரூ.36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40-க்கு விற்கப்பட்டது.






