வேலகவுண்டன்பட்டி அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்

வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்.இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார்.
வேலகவுண்டன்பட்டி அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மகள் தாரணி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் மதுரவேல் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கோபீசன் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் தார ணிக்கும் அப்பகுதியில் உள்ள அஜித்குமார் என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தாரணி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாரணியின் தாய் சசிகலா (47), அவரை அஜித்குமாரிடமிருந்து பிரித்து கூட்டி வந்து கூப்பிட்டாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரர் கதிர்வேல் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று கதிர்வேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தாரணியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கதிர்வேல், இது குறித்து தாரணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

தாரணியின் பெற்றோர், அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தாரணி தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com