search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் சிக்கியது
    X

    நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் சிக்கியது

    • ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
    • அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூபதி (வயது 42). இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.

    லஞ்சம்

    அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூபதி விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ெஜயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதிரடி சோதனை

    இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர்.

    ரூ.1.74 லட்சம் சிக்கியது

    நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 10 அரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியது.

    இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் நாமக்கல் சட்டம்- ஒழுங்கி பிரிவில் பணியாற்றும் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலீசார், இது ெதாடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அதன்படி கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத இந்த பணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×