என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.
    • இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 74), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இவரது மனைவி மனோன்மணி (70). நேற்று மாலை வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த போது பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.

    இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் ஏகாம்பரநாதருக்கு மார்க்கண்டேயனுக்கு அருள்வதற்காக எமதர்மனை வதம் செய்த அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் உள்ள சிவபெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது.
    • அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    பரமத்தி வேலூர்:

    கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் கிளையிலிருந்து அரசு டவுன் பஸ் கரூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அப்போது பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    இதனால் ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் ,கரூர் ,மதுரை, திண்டுக்கல் பகுதியிலிருந்து பரமத்தி வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் ,நாமக்கல் ,சேலம், பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும், ஜேடர்பாளையம் செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் சமாதானம் செய்து அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து எடுத்து காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அரசு டவுன் பஸ் எடுக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் வரிசையாக சென்றன.

    அரசு டவுன் பஸ்சை நிறுத்திய போதை ஆசாமிகள் போலீசாரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு டவுன் பஸ் நடு ரோட்டிலேயே நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நெடுகிலும் கார்கள், வேன்கள் தினமும் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் தினமும் நிறுத்தி வைக்கப் படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே காவல் துறையை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் தினமும் நிறுத்தி வைக்கப்படும் அனைத்து வாகனங் களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்ய வேண்டு மென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு இருக்கிறது.
    • நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை நாமக்கல் மாவட்டத்திற்கு இருக்கிறது. அதிகமான சிறு, குறு தொழிற்சாலைகள், தொழில் அதிபர்கள் இங்கு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருமே 9 ஆண்டு காலமாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாக பயன்பெற்றவர்கள்.

    முத்ரா லோன், கடன் திட்டம், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய ரூ.6 ஆயிரம் தொகை திட்டம் மற்றும் மத்திய அரசு சார்பில் வந்துள்ள திட்டங்களாக இருக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டங்களில் சேர்ந்துள்ள பயனாளிகள் அதிகம்.

    நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம் நாம்முடைய பா.ஜ.கட்சியின் டேட்டா பேஸ். இதை நாங்கள் வாரம் வாரம் ஆய்வு செய்வோம். புதியதாக உறுப்பினர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். புதியதாக எத்தனை கிளை ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றெல்லாம் ஆய்வு செய்யப்படும். நாமக்கல் பகுதி வேகமாக வளர்ந்து வரக்கூடிய பா.ஜனதாவுடைய கோட்டையாக மாறிக்கொண்டு இருக்கிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது பேசும்போது, இளைஞர்களாகிய நீங்கள் அடுத்த வெற்றிக்கு முன்னேறி செல்ல வேண்டும். உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பு வெற்றியைத் தரும். முழுமையான அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக் கூடாது.

    இன்றைக்கு சமுதாயத்தில் வங்கி கணக்கில் அதிகமாக பணம் இருக்கக்கூடிய பணக்காரர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினை ஒரு சாதாரண மனிதருக்கு இன்றைக்கு இல்லை. அவர்களுக்குத்தன் அதிக பிரச்சினை இருக்கிறது. பணத்தை எப்படி காப்பாற்றுவது, பணத்தை எப்படி பெருக்குவது, பணத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது, என அவர்களுக்கு பல பிரச்சினை இருக்கிறது.

    ஆனால், ஆக்கபூர்வமாக எதையும் எதிர்பார்க்காம சம்பாதிக்கிறவங்க தன்னை பணக்காரன் என்று சொல்வது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்க்கையை பொறுத்தவரை எல்லா விஷயத்தையும் ஆழமாக பார்க்கிறாங்க. பணம் என்பது ஒரு பகுதி. மகிழ்ச்சி என்பது ஒரு பகுதி, ஆரோக்கியமான குடும்பம் என்பது ஒரு பகுதி, சமுதாயத்துக்கு அவர்களுடைய பங்களிப்பு ஒரு பகுதி, நாட்டினுடைய வளர்ச்சிக்கு அவர்களும் துணை இருப்பது ஒரு பகுதி. வாழ்க்கையினுடைய வெற்றி என்பது அனைத்தினுடைய கலவை என்று இவர்கள் பார்க்கின்றார்கள்.

    சில மனிதர்கள் அதில் ஒன்றை மட்டும் பார்க்கிறார்கள். அதாவது பணத்தை மட்டும் குறிக்கோளாக நினைக்கிறார்கள். இதனால் வாழ்க்கை மாறி விடுகிறது. இதுபோன்ற வாழ்க்கை வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப் படு கின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்று மதிக்கும் போக மீதமுள்ள முட்டை கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்

    படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரி களுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையா ளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் வரத்து அதி கரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை -610, பர்வாலா -473, பெங்களூர் -600, டெல்லி -490, ஹைதராபாத் -540, மும்பை -605, மைசூர் -603, விஜய வாடா -535, ஹொஸ்பேட் -560, கொல்கத்தா -570.

    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
    • மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப் பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப் பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படு கிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையா ளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின் நனர்.

    கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்து 500 -க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.11ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

    வரத்து அதிகரித்துள்ள தால், மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து உள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயி கள் கவலை அடைந்துள் ளனர்.

    • ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.
    • அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.

    அப்போது ராஜாவுக்கும், கோவிந்தனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

    இதில், ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்ட அக்கம் பகத்தினர் ஆம்பு லன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ராஜாவை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து பரமத்தி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத் தனர்.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-610, பர்வாலா-473, பெங்களூர்-600, டெல்லி-490, ஹைதராபாத்-540, மும்பை-605, மைசூர்-603, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-570.

    முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கும் விற்கப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழி கிலோ ரூ.97 ஆக உயர்ந்தது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    • பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு கடத்த 27-ந் தேதி பொதுப் பணித்துறையினர் தண்ணீர் நிறுத்தம் செய்தனர்.
    • ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு கடத்த 27-ந் தேதி பொதுப் பணித்துறையினர் தண்ணீர் நிறுத்தம் செய்தனர்.

    ராஜாவாய்க்கால் பாசனத்தை நம்பி ஜேடர் பாளையம், வடகரை யாத்தூர், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், பொன்மலர்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, கோரை புல்லட் உள்பட பல்வேறு பணப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்ததால் நீர் தட்டுப்பாட்டால் பயிர்கள் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால், ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறையினர் ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில், அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61½ குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை காய் விற்ப னைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.20-க்கும் என ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    • மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் வீட்டில் வைத்து விற்கப்பட்டது.
    • இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு, வீட்டிற்குள் மறைத்து வைத்து வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த, மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி மோகனாம்பாள் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே போலீசாரை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 110 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தஞ்சையில் ஓபன் கராத்தே போட்டி
    • சோழசிரா மணி அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை யில் ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் நாமக்கல் மாவட்ட கராத்தே தலைமை பயிற்சியாளர் ராஜவேல் தலைமையில் சோழசிரா மணி அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். போட்டியை மேயர் ராம நாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கராத்தே சங்க செயலாளர் முனுசாமி போட்டியை நடத்தினார்.

    இதில் சிறப்பாக விளை யாடிய சோழசிராமணி அரசு பள்ளி மாணவ, மாண விகள் கராத்தே போட்டிக் கான கோப்பைகளை வென்றனர். அவர்களுக்கு கோப்பை களையும், சான்றி தழ்களையும் வழங்கி னார்கள். வெற்றி பெற்ற மாண வர்களையும், தலைமை பயிற்சியாளர் ராஜ வேலை யும், நாமக்கல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தளபதி சுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், மற்றும் பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் சுப்பிர மணியன், சோழசிரா மணி ஊராட்சி மன்ற தலை வர் கோகிலா செல்வம் ஆகி யோர் பாராட்டினார்கள்.

    ×