என் மலர்
நீங்கள் தேடியது "For Raja Canal"
- பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு கடத்த 27-ந் தேதி பொதுப் பணித்துறையினர் தண்ணீர் நிறுத்தம் செய்தனர்.
- ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு கடத்த 27-ந் தேதி பொதுப் பணித்துறையினர் தண்ணீர் நிறுத்தம் செய்தனர்.
ராஜாவாய்க்கால் பாசனத்தை நம்பி ஜேடர் பாளையம், வடகரை யாத்தூர், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், பொன்மலர்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, கோரை புல்லட் உள்பட பல்வேறு பணப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்ததால் நீர் தட்டுப்பாட்டால் பயிர்கள் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால், ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறையினர் ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






