பரமத்திவேலூர் அருகேகல்லால் தாக்கி டெய்லரை கொல்ல முயற்சி

ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.
பரமத்திவேலூர் அருகேகல்லால் தாக்கி டெய்லரை கொல்ல முயற்சி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா (44). டெய்லர். இவரும் வில்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, கோவிந்தன் என்ப வரும் மது அருந்துவதற்காக பில்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர்.

அப்போது ராஜாவுக்கும், கோவிந்தனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

இதில், ராஜாவுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்ட அக்கம் பகத்தினர் ஆம்பு லன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ராஜாவை அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து பரமத்தி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத் தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com