என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் திருக்கோவில், ராஜா கோவில், திருவேலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கடந்த 1-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.40 ஆக இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    கடந்த 1-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.40 ஆக இருந்தது. 2-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆனது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-590, பர்வாலா-446, பெங்களூர்-580, டெல்லி-492, ஹைதராபாத்-520, மும்பை-585, மைசூர்-580, விஜயவாடா-500, ஹொஸ்பேட்-540, கொல்கத்தா-540.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.108 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயித்துள்ளது.

    • பரமத்திவேலூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்ன லுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • திடீர் மழையின் காரணமாக, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி. கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்ன லுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    திடீர் மழையின் காரண மாக, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயி லின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வந்த நிலையில், மழையால் பூமியின் சீதோசண நிலை மாறி குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டு கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    நேற்று நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

    கடந்த வாரம், தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ஒன்று ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப் படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.350 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது.

    வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழிகள் விலை சரிவடைந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
    • தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக் கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்க ளில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கி ன்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக் கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்க ளில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கி ன்றனர்.

    தமிழ கத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காய்கறி மற்றும் பழங்கள் விலை விவரம் (ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    கத்தரி ஒரு கிலோ ரூ.50 முதல் 70, தக்காளி ரூ. 80 முதல் 90, வெண்டை ரூ.32 முதல் 36, அவரை ரூ.50 முதல் 70, கொத்தவரை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.36, புடல் ரூ.32 முதல் 36, பாகல் ரூ.70 முதல் 80, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ.20, தேங்காய் ரூ.25, எலுமிச்சை ரூ.50, கோவக்காய் ரூ.36, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ.23 முதல் 25, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 110 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல், கேரட் ரூ.60 முதல் 65, பீட்ரூட் ரூ.40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ.25 முதல் 27, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.50, பச்சை மிளகாய் ரூ.90 முதல் 100, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ.60, கருணைக்கிழங்கு ரூ.50, பப்பாளி ரூ. 20-க்கு விற்கப்படுகிறது.

    நூல்கோல் ரூ.32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ.70, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

    • பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
    • மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி - கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (வயது 44). டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49), கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    கல்லால் தாக்கினார்

    கடந்த 27-ந் தேதி, இருவரும் பரமத்தி அருகே உள்ள பில்லூர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், ராஜாவை கீழே கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியதில், ராஜா படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது.

    இதனிடையே ராஜாவை கல்லால் தாக்கிய கோவிந்தன் மீது பரமத்தி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சிகிச்சை பலனின்றி...

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இதனிடையே பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், விடுதியின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மெதுவாக உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், மாணவர்களின் 3 செல்போன்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் எழுந்த மாணவர்கள், தங்கள் செல்போன்கள் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, விடுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர் ஒருவர் விடுதியின் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதை வைத்து தங்கள் செல்போன்களை மர்மநபர் திருடிச் சென்றதை மாணவர்கள் அறிந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். 

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில், விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6599 முதல் ரூ.9299 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.6339 முதல் ரூ.7702 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 10009 முதல் ரூ. 14202 வரையிலும் விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் மூட்டைகள் 2500 தொகை ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாப்பம்பாளையத்தார் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • கட்டட சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் பாப்பம்பாளையத்தார் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கட்டட சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

    கட்டட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், சிபிஐ நகர செயலாளர் சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கட்டட சங்க மாவட்ட செயலாளர் குமார் வேலை அறிக்கை வாசித்தார் .கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஆண் , பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கட்டட சங்கம் மாவட்ட துணை செயலாளர் கோபிராஜ் நன்றி கூறினார்.

    • நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில், வெற்றி விகாஸ் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்ட போது பையில் 1.500 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு நிலையத்திற்கு அழைத்து வந்த விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பூபதி (வயது 23), ஸ்ரீராம் (25) ஆகியோர் என்பதும் நாமக்கல் பகுதிக்கு கஞ்சா விற்பனை செய்ய செல்லும் போது இருவரும் பிடிப் பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சீனு, மீனாவுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கொலை சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே அக்லாம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சீனு (வயது 23). கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளி.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (35) என்பவரின் மனைவி மீனாவிற்கும் (29) நீண்ட நாட்களாக கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேலின் மகன் பிரவீன்குமார் என்கிற குணா (21). சென்டரிங் வேலை செய்து வருகிறார். சத்யா இவருடைய தாய்மாமன் ஆவார். இதையடுத்து, சீனுவிடம் தனது தாய்மாமன் சத்யாவின் மனைவி மீனாவுடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறு, பிரவீன்குமார் பலமுறை எச்சரித்துள்ளார்.

    ஆனால் சீனு, மீனாவுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் சீனுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அதன்படி நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், சீனுவின் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சீனுவை தான் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சீனு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிரவீன்குமார், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த நிலையில், கொலை சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த சீனுவின் உடலை உடனடியாக மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சீனுவை கொலை செய்து விட்டு தப்பியோடிய பிரவீன்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தன் தாய்மாமன் மனைவியுடனான கள்ளத் தொடர்பை கைவிடாத ஆத்திரத்தில் கூலித்தொழிலாளியை வாலிபர் குத்திக் கொலை செய்த சம்பவம், வேலகவுண்டன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில், 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என். இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 1-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-600, பர்வாலா-473, பெங்களூர்-580, டெல்லி-492, ஹைதரா பாத்-540, மும்பை-605, மைசூர்-600, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-565.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.97 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    ×