ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி காமிராவில் பதிவான மர்ம நபர் உருவம் 
விடுதி காமிராவில் பதிவான மர்ம நபர் உருவம் 
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இதனிடையே பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், விடுதியின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

மெதுவாக உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், மாணவர்களின் 3 செல்போன்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் எழுந்த மாணவர்கள், தங்கள் செல்போன்கள் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, விடுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர் ஒருவர் விடுதியின் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதை வைத்து தங்கள் செல்போன்களை மர்மநபர் திருடிச் சென்றதை மாணவர்கள் அறிந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com