என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்படவுள்ளது.
    • இதையொட்டி, அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ சேவைகளை வழங்கிடும் வகையில், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதையொட்டி, அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மருத்துவ கட்டிட வரைபட ஒப்புதல், திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், வகுரம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி முதல் லத்துவாடி செல்லும் சாலை பலப்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளின் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டார்.

    இந்த ஆய்வுகளின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கனிமொழி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயக்குமார், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாரகுமாரன் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • தொட்டிப் பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் 3 ஆண்டு களுக்கு பிறகு குருபூர்ணிமா விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் ஆரத்தியும், 7 மணிக்கு சர்வ சித்தி சங்கல்ப பூஜை, நாம பூஜை‌ மற்றும் பாராயணம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே தொட்டிப் பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் 3 ஆண்டு களுக்கு பிறகு குருபூர்ணிமா விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் ஆரத்தியும், 7 மணிக்கு சர்வ சித்தி சங்கல்ப பூஜை, நாம பூஜை மற்றும் பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனையும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் ஆரத்தி நடைபெற்றது. மாலை 7 மணிக்கு ஆரத்தி மற்றும் பூஜைகளும் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல், கீரம்பூர், பரமத்தி வேலூர் சுற்றுவட்டப் பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • ராஜசேகர் (வயது 28). சம்பவத்தன்று இவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி மலையடி குட்டையில் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.
    • 5 பேர் நேற்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மலையடி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). சம்பவத்தன்று இவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி மலையடி குட்டையில் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

    இந்த கொலையில் தொடர்புடைய திருச்செங்கோடு பச்சாகோயில் மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25 ), மலையடிகுட்டை பகுதியை சேர்ந்த பூவரசன் (23), பிரவீன் ராஜ் (27), விக்னேஷ் (27), பெரியசாமி (25) ஆகிய 5 பேர் நேற்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், கடந்த ஆண்டு திருச்செங்கோடு மலையடி குட்டையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது ராஜசேகருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜசேகரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 ேபர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரையும் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 30-ம் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. 1-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.40 ஆனது. 2-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆனது.

    இதேபோல் 3-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-580, பர்வாலா-446, பெங்களூரு-580, டெல்லி-492, ஹைதராபாத்-500, மும்பை-585, மைசூர்-580, விஜயவாடா-500, ஹொஸ்பேட்-540, கொல்கத்தா-540. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.108 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயித்துள்ளது.

    • வரதம்மாள் (17). இவர் அப்பகுதியில் உள்ள குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.
    • ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் மில்லில் வரதம்மாளை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். வரதம்மாள் தினமும் காலை 11 மணியளவில் தனது தந்தை வரதராஜுக்கு போன் பேசி வந்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராமாபுரம் அருகே பைய னப்பள்ளி பகுதியை சேர்ந்த வர் வரதராஜ் (வயது 45) இவரது மகள் வரதம்மாள் (17). இவர் அப்பகுதியில் உள்ள குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.

    இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளை யம் பகுதியில் உள்ள அவர்களது நண்பர்கள் மூலம் கந்தம்பா ளையத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் மில்லில் வரதம்மாளை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். வரதம்மாள் தினமும் காலை 11 மணியளவில் தனது தந்தை வரதராஜுக்கு போன் பேசி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 30-ந் தேதி முதல் தனது தந்தைக்கு வராதம்மாள் போன் பேசவில்லை. இதன் காரணமாக வரதராஜ் தனது மகள் வரதம்மாளுக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து டெக்ஸ்டைல் மில் நிர்வாகத்திடம் கேட்டறிந்த போது, வரதம்மாள் வேலைக்கு வார வில்லை எனவும், அவரை காணவில்லை என தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வரதராஜ் மற்றும் அவரது மனைவி சகுந்தலா (37) ஆகியோர் கந்தம்பா ளையத்தில் உள்ள டெக்ஸ்டைல் மில்லுக்கு வந்து விசாரித்தனர்.

    பின்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வரதம்மாளை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து சகுந்தலா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சிறுமி வரதம்மாள் தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது சிறுமி தனிமை யில் இருந்த போது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
    • நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை யடிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது போதையில் ராஜசேகரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.

    இதை அடுத்து நேற்று இந்த கொலை தொடர்பாக மலர் குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (25), பூவரசன் (23), பிரவீன்ராஜ் (27), விக்னேஷ் (27), பெரிய சாமி (25) ஆகியோர் திருச் செங்கோடு போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கு இடையே திருச் செங்கோடு தீயணைப்பாளர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மலர் குட்டையில் கல்லை கட்டி வீசப்பட்ட ராஜசேகரன் உடலை மீட்டனர். பின்னர் ராஜசேகரன் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீ சார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    முதற்கட்ட விசா ரணை யில், ராஜசேகரனுக்கும் சிலருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு விநாயகர் சிலை வைத்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள் ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய போது மீண்டும் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படு கிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடிபோதையில் அவர்கள் அடிக்கடி மோதிக் கொள் வார்கள் . ஒன்றாக அமர்ந்து மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ராஜ சேகரன் கொலை செய்யப் பட்டுள்ளார். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

    • எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
    • கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாலசமுத்திரம்பட்டியைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 22). இவரது மனைவி கோவிந்தம்மாள்.

    இவர்கள் இருவரும் எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது. இதனால் முத்துக்கு மாரை அவரது தாய் கண்டித் துள்ளார். தாய் கண்டித்த தால் மன முடைந்து காணப் பட்ட அவர், கடந்த 25-ந் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்து மயக்க மடைந்தார். அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது, முத்துக்குமார் எலி மருந்தை சாப்பிட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந் தார். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
    • கோடை வெயில் தாக்கத்தால் காய்கறி வரத்து குறைந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் காய்கறி வரத்து குறைந்துள்ளது.

    அதேபோல மழை பெய்து வருவதாலும் காய் கறி உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் காய்கறி விலை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்தது. இதனால் சில்லறை விற் பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.120 வரை விற்ப னையாகிறது. உழவர் சந்தை களில் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.

    இதற்கிடையே தக்காளி விலைக்கிணையாக பச்சை மிளகாய் விலையும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறி களின் விலையும் உயர்ந் துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ அவரைக்காய் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 40 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    உழவர் சந்தைக்கு 200 முதல் 300 கிலோ வரை அவரைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அவரைக்காய் வரத்து குறைந்திருப்பதால் விலை அதிகரித்துள்ளது.

    இதேபோல், சேலம் உழவர் சந்தைகளில் காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி - ரூ.90-100, உருளை - ரூ.25-30, சின்ன வெங்காயம்-ரூ.65-72, பெரிய வெங்காயம் -ரூ.20 -26, பச்சை மிளகாய் -ரூ.90 -100, கத்தரி -ரூ.42-48, வெண்டைக்காய் -ரூ.28-32, முருங்கை காய் - ரூ.45-50, பீர்க்கங்காய் -ரூ.38-42, சுரக்காய்- ரூ. 20-25, புட லங்காய் - ரூ.26-30, பாகற் காய் - ரூ.50-55, தேங்காய் - ரூ.25-30, முள்ளங்கி - ரூ.20-25, பீன்ஸ் - ரூ.85-90, அவரை -ரூ.72-78, ஊட்டி கேரட் - ரூ.48-75, மாங்காய் - ரூ.20-25, வாழைப்பழம் - ரூ. 30-40, கீரைகள் - ரூ.20- 25, பப்பாளி - ரூ.15-20, கொய்யா-ரூ. 35-40, மாம்பழம் - ரூ.30-45 விற்பனையாகிறது.

    இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, பருவ நிலை மாற்றம் காரணமாக தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட சில காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகளுக்கு காய் கறிகள் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இத னால் விலை அதிகரித்து காணப்படுகிறது. காய்கறி கள் வரத்து அதிகரிக்க தொடங்கிய பின்னர் தான் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இந்நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் ஆற்றுத் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யாததால் மிகவும் சிரமாக இருப்பதாகவும், குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர், அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று அறப்பளீஸ்வரர் கோவில் அருகே காலி குடங்கள், சிண்டெக்ஸ் டேங்களை சாலையில் வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநி யோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 43.53 குவிண்டால் எடை கொண்ட 13 ஆயிரத்து 117 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.20.85-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.69-க்கும், சராசரி விலையாக ரூ.19.25-க்கும் என மொத்தம் ரூ. 81ஆயிரத்து 23-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 217.46 குவிண்டால் எடை கொண்ட 441 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.67-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.71.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.66-க்கும், சராசரி விலையாக ரூ.66.76-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 59 ஆயிரத்து 292-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 15 லட்சத்து 40 ஆயிரத்து 315-க்கு விற்பனையானது.

    • விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் தீ வைப்பு மற்றும் வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மொத்தம் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குற்றவாளிகளை கண்டறிய நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தெரிவித்துள்ளார்.

    ஜேடர்பாளையம் போலீஸ் நிலையம் 9498101050, நாமக்கல் கட்டுப்பாட்டு அறை 9498181216, 04286280007, நாமக்கல் தனிப்பிரிவு அலுவலகம் 9498101020, நாமக்கல் எஸ்.பி., அலுவலகம் 9498181340, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., அலுவலகம் 8300014434, 9498101023, பரமத்தி இன்ஸ்பெக்டர் 9443522993, ஜேடர் பாளையம் தனிப்பிரிவு போலீசார் 9498123154. மேற் கொண்ட தொலைபேசி எண்ணுக்கு சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்கள் தகவல் தரலாம். மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித் துள்ளனர். மேலும் கிராம பகுதிகளில் தொலைபேசி எண்களை நோட்டீஸ் அச்சடித்து விநியோகத்து வருகின்றனர்.

    • அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
    • 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 11-ந் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.

    இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு என நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமாதெரிவித்து உள்ளார். 

    ×