search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Little Girl Mayam"

    • வரதம்மாள் (17). இவர் அப்பகுதியில் உள்ள குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.
    • ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் மில்லில் வரதம்மாளை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். வரதம்மாள் தினமும் காலை 11 மணியளவில் தனது தந்தை வரதராஜுக்கு போன் பேசி வந்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராமாபுரம் அருகே பைய னப்பள்ளி பகுதியை சேர்ந்த வர் வரதராஜ் (வயது 45) இவரது மகள் வரதம்மாள் (17). இவர் அப்பகுதியில் உள்ள குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.

    இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளை யம் பகுதியில் உள்ள அவர்களது நண்பர்கள் மூலம் கந்தம்பா ளையத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் மில்லில் வரதம்மாளை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். வரதம்மாள் தினமும் காலை 11 மணியளவில் தனது தந்தை வரதராஜுக்கு போன் பேசி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 30-ந் தேதி முதல் தனது தந்தைக்கு வராதம்மாள் போன் பேசவில்லை. இதன் காரணமாக வரதராஜ் தனது மகள் வரதம்மாளுக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து டெக்ஸ்டைல் மில் நிர்வாகத்திடம் கேட்டறிந்த போது, வரதம்மாள் வேலைக்கு வார வில்லை எனவும், அவரை காணவில்லை என தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வரதராஜ் மற்றும் அவரது மனைவி சகுந்தலா (37) ஆகியோர் கந்தம்பா ளையத்தில் உள்ள டெக்ஸ்டைல் மில்லுக்கு வந்து விசாரித்தனர்.

    பின்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வரதம்மாளை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து சகுந்தலா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சிறுமி வரதம்மாள் தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது சிறுமி தனிமை யில் இருந்த போது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகரில் காப்பகத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமி மீண்டும் மாயமானார்.
    • இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த மைனர் பெண் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரியாபட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அந்த சிறுமியை மீட்டு முனியசாமியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த சிறுமி வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று காரியா பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் ஊர், ஊராக சென்று பலகாரம் தயார் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற செந்தில்குமார் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×