என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த மிளகாயை தரம் பிரிக்கும் பெண்.
தக்காளி விலையை தொடர்ந்து பச்சை மிளகாய், அவரைக்காய் விலையும் 100 ரூபாயாக உயர்வு
- தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
- கோடை வெயில் தாக்கத்தால் காய்கறி வரத்து குறைந்துள்ளது.
நாமக்கல்:
தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் காய்கறி வரத்து குறைந்துள்ளது.
அதேபோல மழை பெய்து வருவதாலும் காய் கறி உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் காய்கறி விலை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்தது. இதனால் சில்லறை விற் பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.120 வரை விற்ப னையாகிறது. உழவர் சந்தை களில் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.
இதற்கிடையே தக்காளி விலைக்கிணையாக பச்சை மிளகாய் விலையும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறி களின் விலையும் உயர்ந் துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ அவரைக்காய் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 40 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
உழவர் சந்தைக்கு 200 முதல் 300 கிலோ வரை அவரைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அவரைக்காய் வரத்து குறைந்திருப்பதால் விலை அதிகரித்துள்ளது.
இதேபோல், சேலம் உழவர் சந்தைகளில் காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-
தக்காளி - ரூ.90-100, உருளை - ரூ.25-30, சின்ன வெங்காயம்-ரூ.65-72, பெரிய வெங்காயம் -ரூ.20 -26, பச்சை மிளகாய் -ரூ.90 -100, கத்தரி -ரூ.42-48, வெண்டைக்காய் -ரூ.28-32, முருங்கை காய் - ரூ.45-50, பீர்க்கங்காய் -ரூ.38-42, சுரக்காய்- ரூ. 20-25, புட லங்காய் - ரூ.26-30, பாகற் காய் - ரூ.50-55, தேங்காய் - ரூ.25-30, முள்ளங்கி - ரூ.20-25, பீன்ஸ் - ரூ.85-90, அவரை -ரூ.72-78, ஊட்டி கேரட் - ரூ.48-75, மாங்காய் - ரூ.20-25, வாழைப்பழம் - ரூ. 30-40, கீரைகள் - ரூ.20- 25, பப்பாளி - ரூ.15-20, கொய்யா-ரூ. 35-40, மாம்பழம் - ரூ.30-45 விற்பனையாகிறது.
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, பருவ நிலை மாற்றம் காரணமாக தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட சில காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகளுக்கு காய் கறிகள் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இத னால் விலை அதிகரித்து காணப்படுகிறது. காய்கறி கள் வரத்து அதிகரிக்க தொடங்கிய பின்னர் தான் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.






