என் மலர்
நீங்கள் தேடியது "அபிஷேக வழிபாடு"
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் திருக்கோவில், ராஜா கோவில், திருவேலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






