என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யூ.சி கட்டட தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
    X

    திருச்செங்கோட்டில் ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யூ.சி கட்டட தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

    • பாப்பம்பாளையத்தார் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • கட்டட சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் பாப்பம்பாளையத்தார் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கட்டட சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

    கட்டட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், சிபிஐ நகர செயலாளர் சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கட்டட சங்க மாவட்ட செயலாளர் குமார் வேலை அறிக்கை வாசித்தார் .கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஆண் , பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கட்டட சங்கம் மாவட்ட துணை செயலாளர் கோபிராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×