திருச்செங்கோட்டில் மூதாட்டியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர். இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செங்கோட்டில் மூதாட்டியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 74), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இவரது மனைவி மனோன்மணி (70). நேற்று மாலை வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த போது பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.

இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com