என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தபோது எடுத்த படம்.

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    • தஞ்சையில் ஓபன் கராத்தே போட்டி
    • சோழசிரா மணி அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை யில் ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் நாமக்கல் மாவட்ட கராத்தே தலைமை பயிற்சியாளர் ராஜவேல் தலைமையில் சோழசிரா மணி அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். போட்டியை மேயர் ராம நாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கராத்தே சங்க செயலாளர் முனுசாமி போட்டியை நடத்தினார்.

    இதில் சிறப்பாக விளை யாடிய சோழசிராமணி அரசு பள்ளி மாணவ, மாண விகள் கராத்தே போட்டிக் கான கோப்பைகளை வென்றனர். அவர்களுக்கு கோப்பை களையும், சான்றி தழ்களையும் வழங்கி னார்கள். வெற்றி பெற்ற மாண வர்களையும், தலைமை பயிற்சியாளர் ராஜ வேலை யும், நாமக்கல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தளபதி சுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், மற்றும் பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் சுப்பிர மணியன், சோழசிரா மணி ஊராட்சி மன்ற தலை வர் கோகிலா செல்வம் ஆகி யோர் பாராட்டினார்கள்.

    Next Story
    ×