என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
    • பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.

    நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.

    முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.

    உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.

    உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.

    பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்

    பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • பால்குட ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் காயரோ கணசுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    மஞ்சள் ஆடையுடன் பால்குடம் சுமந்து வந்த பக்தர்களின் ஊர்வலமானது நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத் தொடர்ந்து அங்கு அம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்து பக்தர்கள் தங்களது தை மாத கடைசி வெள்ளி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தின குமார் ,விவசாயிகள் சங்க தலைவர் வேணு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய சங்க செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இப்பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கபட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி அறுவடை பணிகள் துவங்கி உள்ள நிலையில்நேரடி நெல்கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் முடிவில் விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடா சலம் நன்றி கூறினார்.

    • வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
    • ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.

    • கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.

    தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.

    மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

    எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
    • ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்காலி கமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் பள்ளி இயங்கி வந்தது.

    இது குறித்து அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக பொதுமக்கள் முறையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விவசாய துறையினரை அணுக வேண்டும்.
    • மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விவசாய துறையினர அணுக வேண்டும் வேளாண்மை துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்

    விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாடு அரசின் பசுமைக்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெற கீழ்க்கண்ட ஆவணங்களோடு நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பேங்க் பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வர வேண்டும் எனவும்மரக்கன்று வளர்ப்புக்கு பராமரிப்பு செலவுத்தொகையும் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களிடம் உள்ளபராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வயல் வரப்புகள், வீட்டைச்சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம். மரங்களை வளர்த்து வருங்கால நம் சந்ததியை காப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
    • கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவ டைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையினை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்.

    மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பச்சை பயிறு, உளுந்துக்கான காப்பீட்டுத் தொகையை குறைக்காமல் சென்ற ஆண்டுக்கான தொகையினையும் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×