என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
- நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தின குமார் ,விவசாயிகள் சங்க தலைவர் வேணு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய சங்க செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கபட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி அறுவடை பணிகள் துவங்கி உள்ள நிலையில்நேரடி நெல்கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் முடிவில் விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடா சலம் நன்றி கூறினார்.






