என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு திருட்டு.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே ஆய்மழை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.

    இவரது மனைவி சந்திரகலா ( வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றார். விழா முடிந்தவுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு ஒரு ஜோடி, ரூ.1500 ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    இந்நிலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சந்திரகலாவுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகலா வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்தார்.

    இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • 4-ம் கால யாகபூஜைகள் நடைபெற்று யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்றது.
    • மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள முத்தையா விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமம், லெட்சுமி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகபூஜைகள் நடைபெற்று யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு, மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடியில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் மகாகும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

    பின்னர் வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் யாகசாலை பூஜை நிறைவுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பரிவார தெய்வங்களான பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பட்டாணி ஐய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • கடந்த ஓராண்டுக்கு மேலாக கப்பி கொட்டிய நிலையில் மட்டும் உள்ளது.
    • சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்கா ரணிருப்புவரை செல்லும் சாலையில் ஆலங்குடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து கடந்த ஓராண்டாக மோசமாக உள்ளது.

    கடந்த ஓராண்டுக்கு மேலாக கப்பிக் கொட்டிய நிலையில் மட்டும் உள்ளது.

    இதனால் ஓட்டிகள் கடும் அவதிடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்தையும் சந்திக்கின்றனர்.

    எனவே பணியை விரைந்து முடித்து தரான தார் சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவீதம் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்கள் குழுவை ஆய்வு நடத்த கூறி நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிக ளிலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட அளவு, அறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை.

    பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
    • சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது

    முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.

    மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் ஆய்வு.
    • பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    பின்பு, சி.2002, இ.3 என பெயரிடப்பட்ட பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    பின்னர், பள்ளி மாணவி நீலவேணி தான் வரைந்த கலெக்டர் அருண் தம்புராஜின் உருவப்படத்தை அவரிடம் வழங்கினார்.

    ஆய்வின்போது நாகை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பள்ளி துணை ஆய்வர் ராமநாதன், தலைமையாசிரியர் ஸ்டெல்லா, ஜேனட் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
    • பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.

    நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.

    முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.

    உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.

    உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.

    பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்

    பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • பால்குட ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் காயரோ கணசுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    மஞ்சள் ஆடையுடன் பால்குடம் சுமந்து வந்த பக்தர்களின் ஊர்வலமானது நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத் தொடர்ந்து அங்கு அம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்து பக்தர்கள் தங்களது தை மாத கடைசி வெள்ளி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தின குமார் ,விவசாயிகள் சங்க தலைவர் வேணு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விவசாய சங்க செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இப்பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கபட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி அறுவடை பணிகள் துவங்கி உள்ள நிலையில்நேரடி நெல்கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் முடிவில் விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடா சலம் நன்றி கூறினார்.

    ×