என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.

    பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அதன்படி திருக்குவளை அருகே வடுவூர் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி நிரப்பிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வடிரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து சுமார் 50 வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி டிராக்டர் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் செயல்முறை வட்டக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஆய்வாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது எனவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
    • தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

    தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர்.
    • ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா (21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். 

    மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து வீதியுலா காட்சி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்கள் பாடி வீதியுலா வந்தனர்.

    வேதாரண்யம்,:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந்தேதி இரவு திருவாசகம், திருமந்திரம், சிவபுராணங்கள் அடங்கிய திருமுறை புத்தகங்களை யானை வாகனத்தில் வைத்து, வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் கோவில் ஓதுவார் மூர்த்திகள் பரஞ்ஜோதி, திருவாரூா் சந்திரசேகர், முத்துக்குமார், திருசெங்காட்டாங்காடி செல்வமுத்துகுமார், சிவகாசி ரமேஷ், மிருதங்க வித்வான் கடலூர் ராஜேஷ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், சச்சிதானந்தம், சேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவார பதிகங்களை இசையுடன் பாடி வீதியுலா வந்தனர்.

    ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • பெண்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி இலக்கிய அமர்வு நிகழ்ச்சி வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை ஆய்வு மாணவி.சுகன்யா, சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தினமும் 120 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணித்து மீன் வியபாரம் செய்யும் பஞ்சவர்ணம், பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு, சிறுதானிய உணவு தயாரிப்பில் முனைப்பு காட்டும் கத்தரிப்புலம் சித்ரா ஆகியோர் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    இவர்களை அரசு கல்லூரி பேராசிரியர் மாரிமுத்து, சமூக செயல்பாட்டாளர் ஆசிரியை வசந்தா ஆகியோர் பாராட்டி பேசினர். மேலும், கல்லூரி மாணவி நித்யா, கோவி.ராசேந்திரன், ஆசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் பெண்ணியம் சார்ந்த பாடல்கள் பாடினர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் பிராபாகரன், கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கைலாசம், மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, கார்த்தி, ஆசிரியர் சத்யராஜ், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வ ராசு, கிளை துணை செயலாளர் செந்தில்நாதன், மணி வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

    • பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
    • பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.

    அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர்.

    பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    • மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த மாதம் 13-ந் தேதி உற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள் தோறும் சுவாமி பூத வாகனம் அன்னப்பச்சி,வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

    முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்க திறக்கபடுதல் தேரோட்டம் தெப்பம் முதலிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில்சக்தி திருவிழாவில் மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன.பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து அகரக்கொந்தகை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், நற்குணம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    ×