search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன
    X

    சுற்றித்திரிந்த பன்றிகளை வலை வைத்து பிடித்தனர்.

    பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன

    • பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன.பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து அகரக்கொந்தகை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், நற்குணம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×