என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் வென்றனர்.
    • ரூ. 2 ஆயிரத்து 500 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஜரித்தா மாக்டலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

    கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் லோகேஷ்வரன், மோகன்ராஜ் மற்றும் ராம்ஜி ஆகிய மாணவர்கள் திருவாரூர் சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி நடத்திய 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் வென்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்ததை பாராட்டி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், வணிகவியல் துறைத் தலைவருமான அன்வர் அஹமது, முனைவர் சாவித்திரி. வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுஜரித்தா மாக்டலினை வாழ்த்தினர்.

    • 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.

    தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்படி 4-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
    • அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி (டேக்வாண்டோ) நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன்.

    வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    • வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.
    • கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் சாலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. குறிப்பாக.

    கீழ்வேளூர் 4-வது வார்டு பகுதியில் வெள்ளந்திடல், பிள்ளை தெருவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    இந்த நாய்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களை விரட்டி சென்று கடித்து வந்தன.

    மேலும் சாலைகளில் நடந்து சென்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து வந்தது.

    ஆடுகளை கடித்து குதறின வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடுகளை, நாய்கள் கடித்து குதறி வந்தன.

    வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் வேட்டையாடி வந்தன.

    வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.

    இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    இதை ெதாடர்ந்து அவர்கள் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

    பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கால்நடை துறையினர் மூலம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    சாலைகள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

    • அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினைவூட்டினார்.
    • உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு அமைச்சர்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    சென்னை முகாம் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

    ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்ததையும், அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினை வூட்டினார்.

    உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    விரைவில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.

    • 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.
    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு நடை பெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.

    தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.

    முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நாதஸ்வரம், வயலினுடன் மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது.

    பாதுகாப்பு பணிக்காக தெப்பத்தை பின் தொடர்ந்து காற்று நிரப்பப்பட்ட மிதவை படகுடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • நாகை நாகூர் ரோட்டில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
    • இதில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ ஆணைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாகை மாவட்டத்தில் எல்லைக்கு உட்பட்ட நாகை நாகூர் ரோட்டில் இருசக்கர வாகனங்களின் சிறப்பு தணிக்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பிரபு மற்றும் நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் நாகை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஜார்ஜ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    தணிக்கையின் போது கல்லூரியின் பயிலும் மாணவர்கள் தலைக்கவசம் இல்லாமல் செல்போன் பேசிக் கொண்டும் வாக னத்தின் ஆவணங்கள் இன்றியும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இயக்கப்பட இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குற்றங்களின் அடிப்படையில் 25 வாகனங்கள்சிறை பிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் சோதனை நடத்தப்படும் எனவும் என்பதை வட்டார போக்கு–வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.

    அதன்படி வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ் வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நாகை தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) அமுதா தலமையில் அளவிடும் பணி நடைபெற்றது.

    இப்பணியில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோவில் நில அளவையர் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.
    • பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது.

    இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

    இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பறவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த ராணி என்பவர் சடலத்தை ஆற்றைக் கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

    மேலும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே நிரந்தரமாக பாலம் அமைத்து சுடுகாடு கூரை அமைத்து தர வேண்டுமென அது கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையை அரசு செவிசாய்க்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
    • ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.

    ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.

    மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.

    இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.

    உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.

    இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.

    ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.

    • அன்பழகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே மணக்காடு பிடாரிக்கட்ட ளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×