search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "After 40 Years"

    • 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.
    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு நடை பெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.

    தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.

    முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நாதஸ்வரம், வயலினுடன் மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது.

    பாதுகாப்பு பணிக்காக தெப்பத்தை பின் தொடர்ந்து காற்று நிரப்பப்பட்ட மிதவை படகுடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×