என் மலர்
நாகப்பட்டினம்
- சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
- சிறந்த படம் வரைந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில்:-
மனிதனோடு மனிதனாய் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனம்தான் இந்த சிட்டுக்குருவி.சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை இன்றும் கிராமமக்களின் மனதில் உள்ளன.
அதனால் தான், வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.அதனால்,இன்றைய கால ங்களில் சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றார்.
மேலும், மாணவர்கள் சிட்டுக்குருவி வளர்க்க கூண்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் சிட்டுக்குருவியின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டினார். சிறந்த படம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, திவ்யா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
- அவ்வைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, துளசியாபட்டினத்தில் உள்ள ஔவையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 49-வது அவ்வை பெருவிழா தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த அவ்வை பெருவிழா நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை, அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.
மேலும், ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவைகள் நடந்தது.
பின்னர், இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.
விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு நிலைகளை கற்றுத்தேர்ந்த மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
- மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டி னம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் சாய் காய் டூ அட்வ ர்ஷர் அகாடமியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை அகில இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டரும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான சாய் புருஸ் தொடக்கி வைத்தார்.
போட்டியில் கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
அதை தொடர்ந்து பல்வேறு நிலைகளை முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிளாக் பெல்ட் பெற்ற பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான சென்சாய் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தாமஸ் ஆல்வா எடிசன் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டார்.
இதில் ஆசியன் கராத்தே நடுவர் அறிவழகன், மரிய சார்லஸ், டாக்டர் உமா, மார்ட்டின் பாக்யராஜ், இளம்பரிதி, பூமாலை, சென்சை அன்பழகன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை தலைமை ஆசிரியர் ஆறு துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.
- குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடை நீர் அகற்றப்படாமல் உள்ளது.
- சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சியில் 36வார்டுகள் உள்ளன இதில் 22 ஆவது வார்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பகுதியில் சேரும் குப்பைகள் அள்ளப்படாமலும் சாக்கடை நீர் அகற்றப்படாமல் தேங்கி கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் குடிநீரும் சரிவர வழங்கப்படுவதில்லை சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதாகவும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 22 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் தயார் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.
- சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சித்தமருத்துவர் அஜ்மல்கான் இலவச மருத்துவ சேவையை செய்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வரும் இவர் வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு சேவை மையத்தை நடத்தி வருகிறார் .
இதன் மூலம் டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கிவருகிறார்.
கொரோனா காலத்தில் கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பணியை தொடங்கிய இவரது சமூக சேவை 750 நாட்களை கடந்துள்ளது.
கொரோனா முதல் அலையில் இருந்து மூன்றாவது அலை வரை நாகை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ சேவையை செய்து வருகிறார்.
திருமருகல், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரணியம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா, தற்பொழுது நிலைவி வரும் இன்புளுன்சா குறித்து இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பணி தனக்கு மன திருப்தியை அளிப்பதாக சித்த மருத்துவர் கூறியுள்ளார்.
- சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
- பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.
ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.
அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.
இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.
இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.
தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.
இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.
அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.
இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.
- 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
- 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் வென்றனர்.
- ரூ. 2 ஆயிரத்து 500 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஜரித்தா மாக்டலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் லோகேஷ்வரன், மோகன்ராஜ் மற்றும் ராம்ஜி ஆகிய மாணவர்கள் திருவாரூர் சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி நடத்திய 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் வென்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்ததை பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், வணிகவியல் துறைத் தலைவருமான அன்வர் அஹமது, முனைவர் சாவித்திரி. வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுஜரித்தா மாக்டலினை வாழ்த்தினர்.
- 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி 4-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
- அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழக பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி (டேக்வாண்டோ) நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன்.
வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.
- கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் சாலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. குறிப்பாக.
கீழ்வேளூர் 4-வது வார்டு பகுதியில் வெள்ளந்திடல், பிள்ளை தெருவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்தன.
இந்த நாய்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களை விரட்டி சென்று கடித்து வந்தன.
மேலும் சாலைகளில் நடந்து சென்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து வந்தது.
ஆடுகளை கடித்து குதறின வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடுகளை, நாய்கள் கடித்து குதறி வந்தன.
வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் வேட்டையாடி வந்தன.
வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.
இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
இதை ெதாடர்ந்து அவர்கள் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கால்நடை துறையினர் மூலம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சாலைகள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.
- அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினைவூட்டினார்.
- உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு அமைச்சர்கொண்டார்.
நாகப்பட்டினம்:
சென்னை முகாம் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.
ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்ததையும், அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினை வூட்டினார்.
உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
விரைவில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.






