என் மலர்
நீங்கள் தேடியது "Handover To parents"
- நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து முகம்மது பாருக் பிரார்த்தனை செய்தார்.
- கூட்ட நெரிசலில் முகம்மது பாருக் தனது குழந்தையை தொலைத்து விட்டார்.
நாகப்பட்டினம்:
திருவாருர் மாவட்டம் பூதமங்கலத்தை சேர்ந்தவர் முகம்மது பாருக்.
இவர் தனது குடும்பத்துடன் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர்கள் வெளியில் வந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் முகம்மது பாருக்தனது குழந்தையை தொலைத்து விட்டார்.
இந்நிலையில் குழந்தை தனியாக இருப்பதை கண்ட தர்கா காவலாளி அய்யப்பன் மற்றும் ஈஸ்வரன் தர்கா உள்துறை அலுவலகத்திற்கு குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்ப டைத்தனர்.
பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் பெற்றோர் மகிழ்ச்சிய டைந்தயனர்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் நாகூர் ஆண்டவர் தர்காவின் காவலாளிக்கும், நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.






