வேதாரண்யம் அரசு பள்ளியில் மகளிர் தினவிழா

பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
மகளிர் தினவிழா நடைபெற்றது
மகளிர் தினவிழா நடைபெற்றது
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com